Realme X2 Pro புதிய மென்பொருள் அப்டேட்டை பெறத் தொடங்கியது. இது வைஃபை அழைப்பு ஆதரவைக் கொண்டுவருகிறது. கடந்த வாரம், ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத், வைஃபை அழைப்பு ஆதரவை இயக்க Realme X2 Pro-வில் VoWiFi அம்சத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்தார். Realme X2 Pro-வுக்கான புதிய அப்டேட்டில், அறியப்பட்ட பல்வேறு பாதுகாப்பு சிக்கல்களை சரிசெய்ய, ஜனவரி 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பு உள்ளது. குறிப்பாக, ரியல்மி போன், டிசம்பர் 2019 பாதுகாப்பு இணைப்பு மற்றும் ஒரு டார்க் மோடை இந்த மாத தொடக்கத்தில், ஒரு மென்பொருள் அப்டேட் மூலம் மாற்றியது.
Realme, ஒரு சமூக மன்ற பதிவில் வழங்கப்பட்ட சேஞ்ச்லாக் படி, Realme X2 Pro-வின் சமீபத்திய அப்டேட் ஃபார்ம்வேர் பதிப்பு RMX1931EX_11.A.09-ஐக் கொண்டுவருகிறது. புதிய மென்பொருள் கொண்டு வரும் முக்கிய மாற்றங்களில் ஒன்று, ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க்குகள் இரண்டிலும் வைஃபை அழைப்பை (recently enabled Wi-Fi calling) இயக்கும் VoWiFi அம்சத்தை சேர்ப்பதாகும். இந்த இரண்டும் சமீபத்தில் தங்கள் நெட்வொர்க்குகளில் நூற்றுக்கணக்கான ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு வைஃபை அழைப்பை இயக்கியுள்ளது. மேலும், இந்த அம்சத்தை ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி உறுதியளித்தார்.
Jio Wi-Fi Calling Service: How to Enable the New Experience on Your Android Smartphone, iPhone
வைஃபை அழைப்பு ஆதரவுக்கு கூடுதலாக, புதிய அப்டேட்டில் ஜனவரி ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பு உள்ளது. இந்த அப்டேட் "பகுதியளவு அறியப்பட்ட" சிக்கல்களையும் சரிசெய்கிறது மற்றும் கணினி ஸ்திரத்தன்மையை மேம்படுத்துகிறது. மேலும், இது இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவேற்றங்களை பாதிக்கக்கூடிய சிக்கலை சரிசெய்கிறது.
"இந்த அப்டேட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, இது ஒரு நிலைநிறுத்தப்பட்ட வெளியீட்டைக் கொண்டிருக்கும். இந்த அப்டேட் இன்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு தோராயமாக வெளியேற்றப்படும். மேலும், முக்கியமான பிழைகள் ஏதும் இல்லை என்பதை உறுதிசெய்த சில நாட்களில், பரந்த அளவிலான வெளியீட்டைக் கொண்டிருக்கும். முக்கியமான பிழைகள் எதுவும் காணப்படவில்லை எனில், எதிர்வரும் நாட்களில் முழு வெளியீடு நிறைவடையும்” என்று நிறுவனம் ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளது.
Realme X2 Pro பயனர்கள் Settings menu-வுக்குச் சென்று சமீபத்திய அப்டேடைக் காணலாம். மேலும், ஓவர்-தி-ஏர் (OTA) வெளியீட்டிற்காக காத்திருக்க விரும்பாத ஆர்வலர்களுக்காக ரியல்மி ஒரு கையேடு பதிவிறக்க இணைப்பை வழங்கியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்