ரியல்மீ X, ரியல்மீ 3i ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று அறிமுகம்: விவரம் உள்ளே!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 15 ஜூலை 2019 11:28 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மீ X கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகமானது
  • இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது
  • அறிமுகமாகும் ரியல்மீ 3i-ன் விலை ரியல்மீ 3-யை விட குறைவாக இருக்கலாம்

ரியல்மீ X ஸ்மார்ட்போன் 18,000 ரூபாய் என்ற அளவில் அறிமுகமாகலாம்

ரியல்மீ X மற்றும் ரியல்மீ 3i ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று விற்பனையாகவுள்ளது. முன்னதாக சீனாவில் இந்த ரியல்மீ X  ஸ்மார்ட்போன் கடந்த மே மாதமே அறிமுகமானது. அதன்பின், மிக நீண்ட காத்திருப்பிற்குப்பிறகு இந்த ஸ்மார்ட்போன் இறுதியாக இந்தியாவில் அறிமுகமாகிறது. அதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போனுடன் 'ரியல்மீ 3i' என்ற ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யவுள்ளது ரியல்மீ நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் முதல்முறையாக இந்தியாவில்தான் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மீ X, ரியல்மீ 3i: அறிமுக நிகழ்வு!

ரியல்மீ X மற்றும் ரியல்மீ 3i ஆகிய ஸ்மார்ட்போன்கள், இந்தியாவில் மதியம் 12:30 மணிக்கு அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வை தனது முகநூல் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பவுள்ளது ரியல்மீ நிறுவனம். இன்றைய நிகழ்வில் ரியல்மீ X மற்றும் ரியல்மீ 3i ஸ்மார்ட்போன்களின் விலை, சிறப்பம்சங்கள், மற்றும் விற்பனை தேதியை ரியல்மீ நிறுவனம் அறிவிக்கவுள்ளது. 

ரியல்மீ X: எதிர்பார்க்கப்படும் விலை!

முன்னதாக, சீனாவில் வெளியான இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று வகைகளை கொண்டிருந்தது. அதில் 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ரியல்மீ X 1,499 யுவான்கள் (15,000 ரூபாய்) என்ற விலையில் விற்பனையானது. 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு என்ற ரியல்மீ X ஸ்மார்ட்போனின் வகைகள் 1,599 யுவான்கள் (16,100 ரூபாய்), 1,799 யுவான்கள் (18,100 ரூபாய்) என்ற விலையில் விற்பனையாகிறது. இவற்றில் 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு ரியல்மீ X ஸ்மார்ட்போன் மட்டுமே ஸ்பைடர்-மேன் வெர்சன் கொண்டு சீனாவில் அறிமுகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக, மாதவ் சேத் இந்த ஸ்மார்ட்போன் 18,000 ரூபாய் என்ற அளவில் அறிமுகமாகும் என கூறியிருந்தது கவணிக்க வேண்டியது.

ரியல்மீ X: சிறப்பம்சங்கள்! (சீனாவில் வெளியான வகை)

Advertisement

ஆண்ட்ராய்ட் பை அமைப்பை கொண்டுள்ள இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போனின் திரை 6.53-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை அளவு, 19.5:9 திரை விகிதம் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இதன் பின்புறத்தில், 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா என இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.

இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போன் 3,765mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. 4G வசதி, வை-பை மற்றும் ப்ளூடூத் v5.0 ஆகிய வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

Advertisement

ரியல்மீ 3i: சிறப்பம்சங்கள்!

இன்னும் அறிமுகமாகவில்ல என்றாலும் ரியல்மீ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் குறித்து சில டீசர்களை வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் டியூட்ராப் நாட்சுடன் 6.22-இன்ச் திரை, மீடியாடெக் ஹீலியொ P60 எஸ் ஓ சி ப்ராசஸர், 4,230mAh பேட்டரி, இரண்டு பின்புற கேமரா, போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. 

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்டு வெளியான ரியல்மீ 3 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality, premium design
  • Vivid OLED display
  • Good overall performance
  • Capable cameras
  • Bad
  • A bit too large for some hands
 
KEY SPECS
Display 6.53-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3765mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sturdy body
  • Quick face recognition
  • Decent selfie camera
  • Smooth UI and app performance
  • Bad
  • Slow charging
  • Weak low-light camera performance
  • No stabilisation for video recording
 
KEY SPECS
Display 6.20-inch
Processor MediaTek Helio P60
Front Camera 13-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4230mAh
OS Android Pie
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. லாவா போல்ட் N2 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்: 5,000mAh பேட்டரி மற்றும் 50MP கேமராவுடன் பட்ஜெட் விலையில் வெளியீடு
  2. கூகுள் பிக்சல் 11 கசிவு: சிறிய வடிவமைப்பு மாற்றங்களுடன் வெளியாகிறது - சிஏடி (CAD) ரெண்டர்கள் மூலம் தகவல்
  3. ஐபோன் 18 ப்ரோ: சிறிய அளவிலான 'டைனமிக் ஐலேண்ட்' வசதியுடன் வெளியாகலாம் - தகவல்
  4. விவோ பேட் 6 ப்ரோ அறிமுகம்: 13.2-இன்ச் 4K டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்!
  5. விவோ X300 அல்ட்ரா மற்றும் X300s அறிமுகம்: 200MP கேமரா, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மற்றும் பல சிறப்பம்சங்கள்!
  6. Oppo Find X9 Ultra உலகளாவிய அறிமுக தேதி உறுதி; Find X9s Pro கேமரா விவரங்கள் வெளியீடு
  7. Vi 5G விரிவாக்கம்: அடுத்த இரண்டு மாதங்களில் 90 நகரங்களுக்கு 5G சேவை வழங்கப்படும் என நிறுவனம் அறிவிப்பு
  8. ஆப்பிளின் ஏர் டிராப் (AirDrop) போன்ற புதிய வசதி: ஆண்ட்ராய்டு 17 மற்றும் One UI 9-ல் 'Tap to Share' அம்சம்களுடன்
  9. ஒன்பிளஸ் Ace 6 அல்ட்ரா ஏப்ரலில் அறிமுகமாக வாய்ப்பு: ரெட்மி K90 அல்ட்ராவுக்குப் போட்டியாக அமையுமா?
  10. விவோ X300s சிறப்பம்சங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி: 200MP கேமரா மற்றும் 7,100mAh பேட்டரியுடன் வெளியாகிறது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.