மிரள வைக்கும் சிறப்பம்சங்கள்! Realme GT 8 & GT 8 Pro அக்டோபர் 21-ஆம் தேதி லான்ச் கன்ஃபார்ம்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 17 அக்டோபர் 2025 00:10 IST
ஹைலைட்ஸ்
  • Snapdragon 8 Elite Gen 5: புதிய ஃபிளாக்‌ஷிப் பிராசஸர், அசுரத்தனமான பெர்ஃப
  • 200MP Ricoh கேமரா: 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் Ricoh-இன்
  • Ricoh-இன் இமேஜிங் டியூனிங் 7000mAh பேட்டரி & 120W ஃபாஸ்ட் சார்ஜிங்: பெர

ரியல்மி GT 8, GT 8 ப்ரோ அறிமுகம், விவரங்கள் வெளியானது

Photo Credit: Realme

Realme-யோட புதிய ஃபிளாக்‌ஷிப் கில்லர் GT 8 சீரிஸோட launch date அதிகாரப்பூர்வமா கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க! வருகிற October 21-ஆம் தேதி, சைனால இந்த போன் மாஸ்ஸா லான்ச் ஆகப்போகுது. இந்தியால எப்ப வரும்னு தான் இப்போ எல்லாருக்கும் கேள்வி. ஆனா, இந்த போன்ல இருக்கப்போற specifications எல்லாம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சா நீங்க சும்மா மிரண்டு போயிடுவீங்க, அந்த அளவுக்கு ஹை எண்டுல இருக்கு!

முதல்ல, நம்மளோட GT 8 Pro பத்தி பாப்போம். இந்த போனோட மிகப்பெரிய பிளஸ் பாயிண்டே அதோட Processor தான்! புதுசா வரப்போற பவர்ஃபுல்லான Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் தான் இதுல இருக்கப் போகுது. இந்த பிராசஸர்-ஐ வச்சு பார்த்தா, பெர்ஃபாமன்ஸ் சும்மா வேற லெவல்ல இருக்கும், Gaming ஆடுறவங்களுக்கு இது ஒரு ட்ரீம் போன்! Display-வைப் பற்றி பேசணும்ன்னா, ஒரு 2K ரெசல்யூஷன் கொண்ட LTPO BOE flat OLED டிஸ்ப்ளே கொடுத்திருக்காங்க. அதுவும் இல்லாம, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வேற. யூஸ் பண்ணும் போது அவ்ளோ ஸ்மூத்தா, பட்டரை மாதிரி இருக்கும் பாஸ்!

அடுத்ததா, எல்லாரும் ஆவலா காத்திட்டு இருந்த கேமரா செக்மென்ட்! Realme இந்த தடவை கேமராக்காக ஜப்பானோட ஃபேமஸான Ricoh கூட கூட்டணி வச்சிருக்காங்க. Ricoh டியூன் செஞ்ச கேமரா யூனிட்டை குடுத்திருக்காங்க. இது ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட்! முக்கியமா, GT 8 Pro-ல ஒரு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு. அது என்னன்னா, 200MP (200-megapixel) பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா! அதுல ஒரு Samsung HP5 சென்சார் கொடுத்திருக்காங்க. அதுவும் இல்லாம, மெயின் கேமராவா 50MP Sony LYT-808 (OIS) சென்சாரும், 50MP Samsung JN5 ultrawide lens-உம் இருக்கப் போகுது. அடேங்கப்பா, இந்த போன் ஒரு கேமரா ஃபிளாக்‌ஷிப் தான்! முக்கியமா, swappable rear camera modules வர்றதுக்கு வாய்ப்பு இருக்குன்னு ஒரு தகவல் சொல்லுது!

Battery பத்தி கவலைப்படவே வேணாம். பெரிய சைஸ்ல ஒரு 7000mAh battery மற்றும் ஃபாஸ்ட்டா சார்ஜ் பண்றதுக்கு 120W wired fast charging சப்போர்ட் இருக்கும்னு ஒரு டிப்ஸ்டர் தகவல் சொல்

லியிருக்காரு! ஒரு நாள் முழுக்க இல்ல, ரெண்டு நாள் கூட இந்த சார்ஜ் தாங்கும் போல! உண்மையிலேயே இது ஒரு பெரிய powerhouse ஸ்மார்ட்போன் தான்.

Advertisement

சரி, இப்போ ரொம்ப முக்கியமான price பத்தி பேசுவோம். இப்போதைக்கு துல்லியமான இந்திய விலை வரல. ஆனா, போன வருஷம் லான்ச் ஆன GT 7 Pro-வோட ஆரம்ப விலை கிட்டத்தட்ட ₹59,999-க்கு இருந்துச்சு. அதே மாதிரி இந்த GT 8 Pro-வும் அதை ஒட்டி ₹60,000 ரேஞ்சில் இருக்கலாம்னு எதிர்பார்க்கலாம். GT 8-ஓட விலை ₹40,000 ரேஞ்சில் இருக்க வாய்ப்பிருக்கு. இந்த ஹை-எண்ட் specs-க்கு இந்த விலை ஒரு நல்ல deal தான்! சோ, Realme GT 8 மற்றும் Realme GT 8 Pro launch-க்கு நீங்க எவ்வளவு எக்சைட்டடா இருக்கீங்கன்னு மறக்காம கமென்ட்ல சொல்லுங்க!

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.