Realme GT 7 Pro இந்த ஒரு செல்போன் வாங்க போட்டா ஆயசுக்கும் பேசும்

Realme GT 7 Pro இந்த ஒரு செல்போன் வாங்க போட்டா ஆயசுக்கும் பேசும்

Realme GT 7 Pro தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP69 மதிப்பிடப்பட்ட கட்டமைப்புடன் வருகிறது

ஹைலைட்ஸ்
  • Realme GT 7 Pro 6.78-இன்ச் முழு-HD+ LTPO AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது
  • ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Realme UI 6.0 உடன் அனுப்பப்படுகிறது
  • Realme GT 7 Pro ஆனது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Realme GT 7 Pro செல்போன் பற்றி தான்.

Realme GT 7 Pro ஆனது இந்தியாவில் நவம்பர் 26 அன்று வெளியிடப்பட்டது. இப்போது முதல் முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரங்கள் மற்றும் வெளியீட்டு சலுகைகளை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. Qualcomm நிறுவனத்தின் சமீபத்திய octa-core Snapdragon 8 Elite சிப்செட் 16GB வரை ரேம் மற்றும் 5,800mAh பேட்டரியுடன் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. இந்த போன் முதலில் சீனாவில் நவம்பர் 4 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு 6,500mAh பேட்டரியுடன் அறிமுகமானது.

இந்தியாவில் Realme GT 7 Pro விலை, அறிமுக சலுகைகள்

Realme GT 7 Pro இந்தியாவில் ஆரம்ப விலை 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் 59,999 ரூபாயில் கிடைக்கிறது. அதே நேரத்தில் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடல் ரூ. 65,999 விலையில் கிடைக்கிறது. இது இப்போது Amazon, Realme India இணையதளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்கள் வழியாக வாங்குவதற்கு கிடைக்கிறது.

Realme GT 7 Pro ஸ்மார்ட்போனை வங்கி சலுகைகளுடன் சேர்த்து 56,999 ரூபாய் விலையில் வாங்கலாம். ஆன்லைனில் வாங்குபவர்கள் 12 மாதங்கள் வரை நோ காஸ்ட் EMI ஆப்ஷன்களை பெறலாம். ஒரு வருட இலவச டிஸ்பிளே காப்பீட்டையும் பெறலாம். இதுதவிர, Realme GT 7 Pro செல்போனை ஆஃப்லைனை வாங்கும் வாடிக்கையாளர்கள் 24 மாத தவணை விருப்பங்களையும் இரண்டு வருட உத்தரவாதத்தையும் பெறலாம். கேலக்ஸி கிரே மற்றும் மார்ஸ் ஆரஞ்சு நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது.

Realme GT 7 Pro அம்சங்கள்

Realme GT 7 Pro ஆனது 6.78-இன்ச் முழு-HD+ LTPO AMOLED டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம் கொண்ட டால்பி விஷன் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது HDR10+ சப்போர்ட் உடன் உள்ளது. ஃபோன் 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 மெமரியுடன் சேர்த்து Snapdragon 8 Elite SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான Realme UI 6.0 ஸ்கின் மூலம் இயங்குகிறது.

கேமரா என்று பார்த்தால் Realme GT 7 Pro ஆனது 50-மெகாபிக்சல் Sony IMX906 முதன்மை சென்சார் கேமரா, 50-megapixel Sony IMX882 டெலிஃபோட்டோ ஷூட்டர் கேமரா மற்றும் பின்புறத்தில் 8-megapixel Sony IMX355 அல்ட்ரா-வைட் கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு இது 16 மெகாபிக்சல் சென்சார் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Realme GT 7 Pro ஆனது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. வெறும் 30 நிமிடங்களில் ஃபோனை பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் சார்ஜ் செய்துவிடும் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பிற்காக, இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் உள்ளது. இந்த கைபேசியானது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69-மதிப்பிடப்பட்ட கட்டமைப்புடன் வருகிறது. இது 222 கிராம் எடை கொண்டது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »