மிகக்குறைந்த விலையில், அதிக சிறப்பம்சங்களுடன் ரியல்மி C12, ரியல்மி C15 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 19 ஆகஸ்ட் 2020 10:37 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மி C12 ஸ்மார்ட்போனானது 8,999 ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ளது
  • ரியல்மி C15 ஆகஸ்ட் 27 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது
  • ரியல்மி C12 ஆகஸ்ட் 24 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது

இரண்டு விதமான நிறங்களில், ரிவர்ஸ் சார்ஜிங் வசதியுடன் வந்துள்ளன.

ரியல்மி தரப்பில் புதிதாக இரண்டு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம். 

ரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்காக, குறைந்த விலையில், அதிக சிறப்பம்சங்களுடன் ரியல்மி C12 மற்றும் ரியல்மி C15 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் ரியல்மி C12 ஆனது இதற்கு முந்தைய பதிப்பான ரியல்மி C11 இ்ன் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.  ரியல்மி C15 ஆனது C சீரிஸில் குவாட் கேமரா (நான்கு கேமராக்கள்) உடன் அறிமுகமாகியுள்ள ஸ்மார்ட்போன் ஆகும்.

இந்த இரு ஸ்மார்ட்போன்களுமே வாட்டர் டிராப் ஸ்டைல் டிஸ்பிளே நாட்ச், ஒரே விதமான டிசைனுட் காணப்படுகின்றன. இரு ஸ்மார்ட்போன்களிலுமே பின்பக்கத்தில் விரல்ரேகை சென்சார் உள்ளன. கூடுதலாக இரண்டு விதமான நிறங்களில், ரிவர்ஸ் சார்ஜிங் வசதியுடன் வந்துள்ளன. 


ரியல்மி C12 சிறப்பம்சங்கள்:

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10, ரியல்மி UI
திரை அளவு: 6.5 இன்ச்
பிராசசர்: மீடியாடெக் ஹீலியோ G35 SoC
கேமரா:
பின்பக்கத்தில் ட்ரிப்பிள் கேமரா உள்ளன. 13MP பிரைமரி கேமரா, 2 MP மோனோகுரோம் சென்சார் கேமரா, 2MP  மேக்ரோ லென்ஸ் கேமரா
முன்பக்கத்தில் 5 மெகா பிக்சலுடன் செல்பி கேமரா உள்ளது.
பேட்டரி சக்தி: 6,000mAh 
சார்ஜர்:
கூடுதல் சிறப்பம்சங்கள்:
64ஜிபி மெமரி, 256 ஜிபி எக்ஸ்பேண்டபிள் மெமரி, 4ஜி வோலட், வைஃபை, ப்ளூடூத் V5.0, ஜிபிஎஸ், மைக்ரோ USB, விரல் ரேகை சென்சார், 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.

ரியல்மி C12 ஸ்மார்ட்போனில் ட்ரிப்பிள் கேமரா உள்ளது

ரியல்மி C15 சிறப்பம்சங்கள்:
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10, ரியல்மி UI
திரை அளவு: 6.5 இன்ச்
பிராசசர்: மீடியாடெக் ஹீலியோ G35 SoC
கேமரா:
பின்பக்கத்தில் குவாட் கேமரா உள்ளன. 13MP பிரைமரி கேமரா, 8MP  செகண்டரி கேமரா, 2 MP மோனோகுரோம் சென்சார் கேமரா, 2MP  மேக்ரோ லென்ஸ் கேமரா
முன்பக்கத்தில் 5 மெகா பிக்சலுடன் செல்பி கேமரா உள்ளது.
பேட்டரி சக்தி: 6,000mAh 
சார்ஜர்:
கூடுதல் சிறப்பம்சங்கள்:
64ஜிபி மெமரி, 256 ஜிபி எக்ஸ்பேண்டபிள் மெமரி, 4ஜி வோலட், வைஃபை, ப்ளூடூத் V5.0, ஜிபிஎஸ், மைக்ரோ USB, விரல் ரேகை சென்சார், 18W ஃபாஸ்ட் சார்ஜிங்..

Advertisement

ரியல்மி C15 ஸ்மார்ட்போனில் அல்ட்ரா வைட் லென்ஸ் கேமரா உள்ளது

விலை மற்றும் விற்பனை தேதி:
இந்தியாவில் ரியல்மி C12 ஸ்மார்ட்போனானது அடிப்படையாக 3ஜிபி ரேம்+ 32ஜிபி மெமரி வேரியன்ட்  8,999 ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ளது. ரியல்மி C15 ஸ்மார்ட்போன் அடிப்படையாக 3ஜிபி ரேம் + 32ஜிபி மெமரி வேரியன்ட் 9,999 ரூபாய்க்கும், 4ஜிபி ரேம்+ 64ஜிபி மெமரி கொண்ட வேரியன்ட் 10.999 ரூபாய்க்கும் அறிமுகமாகியுள்ளன. 

Advertisement

ரியல்மி C12 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 24 ஆம் தேதி மதியம் 12 மணிக்கும், ரியல்மி C15 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 27 ஆம் தேதி மதியம் 12 மணிக்கும் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், அமேசான் மற்றும் ரியல்மி ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். ஆஃப்லைனில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் ரியல்மி C12 ஸ்மாரட்போனும், செப்டம்பர் 3 ஆம் தேதி ரியல்மி C15 ஸ்மார்ட்போனும் விற்பனைக்கு வருகின்றன.


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life
  • Built well
  • Bad
  • Big and heavy
  • Weak overall performance
  • Sub-par cameras
 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Helio G35
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 6000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life
  • Built well
  • Bad
  • Big and heavy
  • Weak overall performance
  • Sub-par cameras
  • 4GB variant isn’t good value
 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Helio G35
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 6000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Realme Note 80 6,300mAh பேட்டரி, 6.74-இஞ்ச் டிஸ்ப்ளே உடன் அறிமுகம்: விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியானது
  2. Lava Bold 2 5G இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு; Under-Display Fingerprint Scanner உறுதி
  3. iQOO Z11 165Hz டிஸ்ப்ளே, 9,020mAh பேட்டரியுடன் டீஸ்; சீனாவில் விரைவில் அறிமுகம்
  4. SanDisk Extreme Fit USB Type‑C Flash Drive இந்தியாவில் அறிமுகமானது.. அசத்தும் அம்சங்கள்
  5. Samsung Galaxy M17e 5G: 50MP கேமரா, 6,000mAh பேட்டரியுடன் மார்ச் 17ல் இந்தியாவில் அறிமுகம்
  6. OnePlus 15T வடிவமைப்பு மற்றும் நிறங்கள் சீனா வெளியீட்டுக்கு முன் அதிகாரப்பூர்வமாக வெளியீடு
  7. Oppo Find N6 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மார்ச் 17 அன்று சீனாவில் அறிமுகம்; கான்பிகரேஷன் மற்றும் நிறங்கள் உறுதி
  8. MacBook Neo vs MacBook Air (2026) ஒப்பீடு: இந்திய விலை, அம்சங்கள் மற்றும் பல
  9. DoT-இன் SIM Binding விதி என்ன? – மெசேஜிங் ஆப்ஸ் மற்றும் பயனர்களுக்கு இதன் தாக்கம்
  10. Poco C85x 5G இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு.. பல சுவாரஷ்ய அம்சங்களுடன்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.