ஆகஸ்ட் 15-ல் அறிமுகமாகிறது 64 மெகாபிக்சல் கேமரா போன், ரியல்மீ நிறுவனத்தின் அதிரடி!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 6 ஆகஸ்ட் 2019 15:56 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மீ இந்த தகவலை வெய்போ கணக்கில் வெளியிட்டுள்ளது
  • இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 8-ல் இந்தியாவில் அறிமுகம்
  • இன்னும் இந்த ஸ்மார்ட்போனின் பெயர் வெளியாகவில்லை

இந்த 64 மெகாபிக்சல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த வாரத்தில் அறிமுகமாகவுள்ளது

Photo Credit: Weibo

64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என்பதை ரியல்மீ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்தியாவில் முதலில் காட்சிப்படுத்தப்படவிருக்கும் இந்த தொழில்நுட்பம், ஒரு வாரத்திற்குப்பின் சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த ரியல்மீ நிறுவனம் தயாராக உள்ளது. 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போனில் நான்கு கேமரா அமைப்பு இருக்கும் என்று ரியல்மீ நிறுவனம் வெளியிட்டுள்ள தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட சாம்சங்கின் ஐசோசெல் பிரைட் GW1 சென்சாரை ரியல்மீ நிறுவனம் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் இதுவரை நிறுவனத்தின் பக்கத்திலிருந்து எந்த ஒரு தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானவுடன் விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று இந்த சீன நிறுவனம் தனது வெய்போ கணக்கில் தகவல் வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக ரியல்மீ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை, ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் நான்கு கேமரா அமைப்பு இருக்கும் என்பதை மீண்டும் குறிப்பிட்டுள்ளது.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி ரியல்மீ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பெயர் என்ன என்பது இன்னும் ஒரு மர்மமாக இருக்கிறது. இது X-தொடரின் ஒரு ஸ்மார்ட்போனாக இருக்குமா அல்லது புதிய ‘கேமரா-மையப்படுத்தப்பட்ட' தொடரை அறிமுகப்படுத்துமா என்பது தெரியவில்லை. ரியல்மீ இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத்தும் இந்த புதிய ஸ்மார்ட்போனைப் பெறும் முதல் நாடு இந்தியா என்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.

வரவிருக்கும் ரியல்மீ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட சாம்சங்கின் ஐசோசெல் பிரைட் GW1 சென்சாரை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மீ சாம்சங் சென்சாரைப் பயன்படுத்தினால், வரவிருக்கும் ஸ்மார்ட்போன் குறைந்த ஒளி நிலையில் 16 மெகாபிக்சல் அளவிலான படங்களை எடுக்கும் திறனை கொண்டிருக்கும். 

வரவிருக்கும் ரியல்மீ ஸ்மார்ட்போனின் பிற விவரங்கள் குறைவாகவே வெளியாகவுள்ளது, ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்தியாவில் நடைபெறும் அதன் அறிமுக நிகழ்ச்சியில் நிறுவனம் அனைத்து விவரங்களையும் வெளியிடவுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஐபோன் 18 சீரிஸ் விலை உயர்வு முந்தைய கணிப்புகளை விடக் குறைவாக இருக்கும்!
  2. சாம்சங் கேலக்ஸி A27 5G அறிமுகம்: ஸ்னாப்டிராகன் சிப், 6.7-இன்ச் திரை மற்றும் சலுகைகள்!
  3. ஆப்பிள் விலை உயர்வு: மேக், ஐபேட் விலை அதிகரிப்பு, ஐபோன்களுக்கு விலக்கு
  4. Oppo Reno 16 முதல் பார்வைகள் (First Impressions)
  5. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 4 இந்தியாவில் அறிமுகம்: 52dB ANC மற்றும் 54 மணிநேர பேட்டரி லைஃப்
  6. லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் 5,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  7. வாட்ஸ்அப் நிறுவனம் தெரியாத எண்களிலிருந்து வரும் அரட்டைகள் (Chats) குறித்து பயனர்களை எச்சரிக்கத் தொடங்கியுள்ளது
  8. அமேசான் இந்தியாவின் விரைவு வர்த்தகம் 300 நகரங்களுக்கு விரிவாக்கம்; பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டம் அறிமுகம்!
  9. அசுஸ் ROG கேமிங், ப்ரோஆர்ட் லேப்டாப்கள் ரூ.1.99 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தன!
  10. ஜூன் 29 இந்திய அறிமுகத்தை உறுதி செய்தது சாம்சங் கேலக்ஸி M47 5G; முக்கிய அம்சங்கள் கசிவு!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.