வரவிருக்கும் புதிய ரியல்மி போன்களின் விலை எவ்வளவு தெரியுமா...? 

வரவிருக்கும் புதிய ரியல்மி போன்களின் விலை எவ்வளவு தெரியுமா...? 

ரியல்மி 6 ப்ரோ இரட்டை செல்ஃபி கேமராவுடன் அறிமுகமாகும்

ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் ரியல்மி 6 ப்ரோ & ரியல்மி 6 வெளியீடு மார்ச் 5-ல் நடைபெறும்
  • இரண்டு போன்களும் 90Hz டிஸ்பிளேவுடன் கிண்டல் செய்யப்படுகின்றன
  • ரியல்மி 6-ல், MediaTek Helio G90 இருப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது
விளம்பரம்

இந்தியாவில் ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோவின் விலை அதிகாரப்பூர்வமாக வெளியிவதற்கு சில நாட்களுக்கு முன்னரே கசிந்துள்ளது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்கள் நாட்டில் ஆரம்ப விலையான ரூ.9,999-க்கு வாங்குவதற்கு கிடைக்கும். இந்த வார தொடக்கத்தில், ரியல்மி 6 ப்ரோ மற்றும் ரியல்மி 6 மார்ச் 5, வியாழக்கிழமை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரியல்மி அறிவித்தது. 


இந்தியாவில் Realme 6 Pro, Realme 6 விலை (வதந்தியானவை):

இந்தியாவில் Realme 6 Pro-வின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.13,999-ல் இருந்து தொடங்குகிறது. Realme 6 ரூ.9,999-ல் இருந்து தொடங்குகிறது. வளர்ச்சியை நன்கு அறிந்த ஒருவரை மேற்கோள் காட்டி இந்திய வலைப்பதிவு தி அன்ஃபைஸ் வலைப்பதிவு தெரிவிக்கிறது. ரியல்மி 6 ப்ரோ மற்றும் ரியல்மி 6 ஆகிய இரண்டின் ஆரம்ப விலை நிர்ணயம், கடந்த ஆண்டு ரியல்மி 5 ப்ரோ மற்றும் ரியல்மி 5-ஐ அறிமுகப்படுத்தும்போது ரியல்மி அறிவித்ததைப் போன்றது. இருப்பினும், ரியல்மி 5 ப்ரோ தற்போது ரூ.11,999-க்கு கிடைக்கிறது, அதே சமயம் ரியல்மி 5 ரூ.8,999 ஆரம்ப விலைக் குறியீட்டுடன் விற்பனையில் உள்ளது.

இந்த வலைப்பதிவு ரியல்மி 6 ப்ரோ மற்றும் ரியல்மி 6 இரண்டையும் காட்டும் ஒரு ரெண்டரை வெளியிட்டுள்ளது. Realme.com தளம் அல்லது Flipkart-ல் கிடைக்கும் ரெண்டர்களில் இருந்து நாம் காணக்கூடிய எந்தவொரு விவரங்களையும் ரெண்டர் விவரிக்கவில்லை. ஆயினும்கூட, ஸ்மார்ட்போன்களில் தனித்துவமான பச்சை மற்றும் ஊதா கலர் ஆப்ஷன்கள் இருக்கலாம் என்று அது அறிவுறுத்துகிறது.

realme 6 pro 6 render leak the unbiased blog Realme 6 Pro  Realme 6

ரியல்மி 6 ப்ரோ மற்றும் ரியல்மி 6 ஆகியவை ரெண்டர் மூலம் கசிந்துள்ளன
Photo Credit: The Unbiased Blog

Realme 6 Pro விவரக்குறிப்புகள் (எதிர்பார்க்கப்படுபவை):

ரியல்மி 6 ப்ரோ, 90Hz full-HD+ display-வைக் கொண்டதாகவும், 30W ஃப்ளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருவதாகவும் கிண்டல் செய்யப்படுகிறது. மேலும், இந்த போன் இரட்டை செல்ஃபி கேமராவை வெளிப்படுத்தும், மேலும் 64-megapixel primary sensor உடன் குவாட் ரியர் கேமரா அமைப்பையும் உள்ளடக்கும். ரியல்மி 6 ப்ரோ Qualcomm Snapdragon 720G​ SoC-யால் இயங்குவதாகவும் வதந்தி பரவியுள்ளது.


Realme 6 விவரக்குறிப்புகள் (எதிர்பார்க்கப்படுபவை):

ரியல்மி 6 ப்ரோவைப் போலவே, ரியல்மி 6, 90Hz டிஸ்பிளேவிலும் பல பின்புற கேமராக்களிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனில் hole-punch டிஸ்பிளே வடிவமைப்பில் ஒற்றை செல்பி கேமராவும் காணப்படுகிறது. மேலும், MediaTek Helio G90 SoC உடன் வந்து கைரேகை சென்சார் சட்டத்தில் பொருத்தப்பட்டிருப்பதாக வதந்தி பரவியுள்ளது.

ரியல்மி 6 ப்ரோ மற்றும் ரியல்மி 6-ஐ மார்ச் 5-ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது. இதற்கிடையில், சில புதிய வதந்திகள் மற்றும் அதிகாரப்பூர்வ டீஸர்கள் வலையைத் (Web) தாக்கும் என்று எதிர்பார்ப்பது பாதுகாப்பானது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Striking design
  • Decent selfie cameras
  • Good all-round performance
  • Solid battery life and quick charging
  • Bad
  • Preinstalled bloatware
  • Somewhat bulky
  • Cameras could do better in low light
Display 6.60-inch
Processor Qualcomm Snapdragon 720G
Front Camera 16-megapixel + 8-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 12-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4300mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Impressive performance
  • Very good battery life
  • Clean UI
  • Bad
  • Preinstalled bloatware
Display 6.50-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4300mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »