4 பின்புற கேமராக்கள், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 10,000 ரூபாய்க்கும் குறைந்த விலையில், ரியல்மீ நிறுவனம் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் நாளை (ஆகஸ்ட் 20) இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறது. ரியல்மீ நிறுவனத்தின் ரியல்மீ 5 மற்றும் ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன்கள், இந்தியாவில் நாளை ஒரு நிகழ்வில் அறிமுகமாகவுள்ளது. இன்னும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகாத நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அந்த தகவல்கள் இதோ!
ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன்கள்: அறிமுக தேதி, எதிர்பார்க்கப்படும் விலை!
ஆகஸ்ட் 20-ஆன நாளை ரியல்மீ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன்களான ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வில் ரியல்மீ பட்ஸின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனான 'ரியல்மீ பட்ஸ் 2' இயர்போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முன்னதாக ரியல்மீ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மாதவ் சேத். ரியல்மீ 5 ஸ்மார்ட்போன் 10,000 ரூபாய்க்கும் குறைந்த விலையில் அறிமுகமாகவுள்ளது என குறிப்பிட்டிருந்தார். ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போனின் விலை பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகிய வண்ணம் இல்லை.
ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன்கள்: சிறப்பம்சங்கள்!
ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் பற்றி பார்க்கையில் 4 கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் கேமரா தவிர்த்து, ஒரு அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, ஒரு மேக்ரோ கேமரா மற்றும் ஒரு டெப்த் சென்சார் கேமரா இடம் பெற்றிருக்கும் எனக் கூறப்படுகிறது. ரியல்மீ 5 ஸ்மார்ட்போன் 4 கேமராக்களுடன் 16 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டிருக்கும், மற்ற 3 கேமராக்களும் ரியல்மீ 5 Pro போன்றே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் கொண்டிருக்கும் என்ற தகவளுக்கு மாறாக இந்த ஸ்மார்ட்போன்களின் விளம்பரத்தில், தெளிவாக பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் இடம்பெற்றிருப்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ரியல்மீ 5 ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 தொழில்நுட்பத்துடன் வெளியாகவுள்ளது. மேலும், 30 நிமிடத்தில் 55 சதவிகிதம் சார்ஜ் செய்யும் திறன் கொண்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போனின் பேட்டரி வசதி பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.
கீக்பென்ச் (Geekbench) தளத்தில் வெளியான தகவலின்படி ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில வதந்திகள் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 712 எஸ் ஓ சி கொண்டிருக்கும் என குறிப்பிடுகிறது.
மறுபுறத்தில் ரியல்மீ 5 ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்