அதிரடி விற்பனையில் 'ரியல்மீ 3i', புதிய சலுகை விவரங்கள் உள்ளே!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 30 ஜூலை 2019 11:14 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மீ 3i முன்று வண்ணங்களில் விற்பனையாகவுள்ளது
  • ரியல்மீ 3i ஹீலியோ P60 ப்ராஸசர், 4,230mAh பேட்டரி அம்சங்களை கொண்டுள்ளது
  • 5,750 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகைகளுடன் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை

இந்த மாதத்தின் நடுவில் இந்த 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் அறிமுகமானது.

சமீபத்திய அறிமுகமான ரியல்மீ நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் இன்று விற்பனையாகவுள்ளது. இந்த 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போனின் விற்பனை ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ தளங்களில் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. கடந்த ஜூலை 15 அன்று அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஜூலை 23 அன்று நடைபெற்றது. இந்த 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் இரண்டு பின்புற கேமரா,டியூட்ராப் திரை, மீடியாடெக் ஹீலியோ P60 எஸ் ஓ சி ப்ராஸசர், 4,230mAh பேட்டரி, 13 மெகாபிக்சல் கேமரா என பல சிறப்பம்சங்களை  கொண்டுள்ளது.

'ரியல்மீ 3i': விலை, சலுகைகள்!

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் 7,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. 4GB RAM + 64GB சேமிப்பு அளவில் அறிமுகமான மற்றொரு 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன்கள் கருப்பு (Diamond Black), நீலம் (Diamond Blue), மற்றும் சிவப்பு (Diamond Red) என மூன்று வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை  இன்று (ஜூலை 30) மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ ஆன்லைன் தளங்களில் விற்பனையாகவுள்ளது.

விற்பனை சலுகைகளைப் பொறுத்தவரை, ரியல்மீ ஆன்லைன் தளத்தில் 5,750 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகைகள், 22 வவுச்சர்கள் மூலம் தலா 100 ரூபாய் என 2,200 ரூபாய் வரை உடனடி கேஷ்பேக், மேக்மைட்ரிப், மைன்ட்ரா, மற்றும் ஜூம்கார் ஆகியவற்றிலிருந்து 4,800 மதிப்புள்ள வவுச்சர்கள், மொபிக்விக் மூலம் 10 சதவீதம் சூப்பர் கேஷ், 1,500 ரூபாய் வரை வழங்கவுள்ளது.

ரியல்மீ 3i: சிறப்பம்சங்கள்!

ரியல்மீ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு அறிமுகமாகியுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் டியூட்ராப் நாட்சுடன் 6.22-இன்ச் திரை, 19:9  திரை விகிதம், 88.30 சதவிகித திரை-உடல் விகிதம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியொ P60 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவில் இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. மேலும், முன்புறத்தில் 13 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4,230mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4G, வை-பை, ப்ளூடூத் v4.2, ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sturdy body
  • Quick face recognition
  • Decent selfie camera
  • Smooth UI and app performance
  • Bad
  • Slow charging
  • Weak low-light camera performance
  • No stabilisation for video recording
 
KEY SPECS
Display 6.20-inch
Processor MediaTek Helio P60
Front Camera 13-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4230mAh
OS Android Pie
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme 3i, Realme 3i Price in India, Realme 3i Specifications, Realme
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
  2. James Webb Space Telescope-ன் புதிய கண்டுபிடிப்பு: Jupiter ஆரோராவில் Io, Ganymede தடயங்கள்
  3. Meta Platforms மோசடி தடுப்பு கருவிகளை விரிவுபடுத்துகிறது – WhatsApp-ல் புதிய Device Link எச்சரிக்கை
  4. Xiaomi 17 Ultra இந்தியாவில் அறிமுகம் – 200 மெகாபிக்சல் Leica கேமரா, தொடர்ச்சியான Optical Zoom: விலை மற்றும் அம்சங்கள்
  5. Vivo Y51 Pro 5G இந்தியாவில் அறிமுகம் – 7,200mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா: விலை மற்றும் விவரங்கள்
  6. Realme Note 80 6,300mAh பேட்டரி, 6.74-இஞ்ச் டிஸ்ப்ளே உடன் அறிமுகம்: விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியானது
  7. Lava Bold 2 5G இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு; Under-Display Fingerprint Scanner உறுதி
  8. iQOO Z11 165Hz டிஸ்ப்ளே, 9,020mAh பேட்டரியுடன் டீஸ்; சீனாவில் விரைவில் அறிமுகம்
  9. SanDisk Extreme Fit USB Type‑C Flash Drive இந்தியாவில் அறிமுகமானது.. அசத்தும் அம்சங்கள்
  10. Samsung Galaxy M17e 5G: 50MP கேமரா, 6,000mAh பேட்டரியுடன் மார்ச் 17ல் இந்தியாவில் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.