இந்தியாவில் 'ரியல்மீ X' ஸ்மார்ட்போனுடன், 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போனும் அறிமுகமாகவுள்ளது. முன்னதாக கடந்த திங்கட்கிழமை ரியல்மீ இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனரான மாதவ் சேத், ரியல்மீ X ஸ்மார்ட்போனுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இன்னிலையில் செவ்வாய்கிழமையான இன்று, ஃப்ளிப்கார்ட் நிறுவனம், இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போனுடன் ரியல்மீ 3i ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. ரியல்மீ X-உடன் அறிமுகமாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன், குறைந்த விலை பட்ஜெட் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாதவ் சேத் வெளியிட்ட ட்வீட், ஜூலை 15-ல் ரியல்மீ 3i ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதி செய்யும் வண்ணம் உள்ளது. அவர் வெளியிட்டுள்ள அந்த டிவீட்டில்,"எங்களுடைய புதிய #DareToLeap தயாரிப்புடன் திங்கட்கிழமை சந்திப்போம். அதுசரி, நாங்கள் எத்தனை புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தப்போகிறோம் என ஏதாவது யூகம் உள்ளதா?" என கூறியுள்ளார்.
அந்த ட்வீட்டில் ரியல்மீ 3i-தான் அறிமுகமாகப்போகிறது என அவர் குறிப்பிடாத நிலையில், ஃப்ளிப்கார்ட் நிறுவனம், தன் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கு பிரத்யேகமாக ஒரு பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த பக்கத்தில், ரியல்மீ 3i-ஐ 'ஸ்மார்ட்போன்களின் சாம்பியன்' என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்டைலிஷ் டிசைன், பெரிய பேட்டரி, நல்ல டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்டுள்ளது என அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வல்லுனர் இஷான் அகர்வால், இது குறித்து கூறுகையில், இந்த 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட்டின் எக்ஸ்குளூசிவாக இருக்கும். மேலும், இந்த ஸ்மார்ட்போன் ரியல்மீ 3-யை விட குறைந்த விலையில் இருக்கும் என கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்டு வெளியான ரியல்மீ 3 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமானது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்