'ரியல்மீ 3i', இந்தியாவில் அறிமுகமான ரியல்மீயின் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 16 ஜூலை 2019 10:35 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மீ 3i ஸ்மார்ட்போன் மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது
  • இந்த ஸ்மார்ட்போன் 4,230mAh பேட்டரிய கொண்டுள்ளது
  • ரியல்மீ X ஸ்மார்ட்போனுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானது

இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் அளவிலான கேமராவை கொண்டுள்ளது

'ரியல்மீ 3i' முதன்முறையாக இந்தியாவில் அறிமுகமானது. ரியல்மீ X ஸ்மார்ட்போனுடன்  இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ரியல்மீ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன், சமீபத்தில் அறிமுகமான 'ரெட்மீ 7A' ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக அறிமுகமாகியுள்ளது. இரண்டு பின்புற கேமரா,டியூட்ராப் திரை, மீடியாடெக் ஹீலியோ P60 எஸ் ஓ சி ப்ராஸசர், 4,230mAh பேட்டரி, 13 மெகாபிக்சல் கேமரா என பல சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

'ரியல்மீ 3i': விலை!

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் 7,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. 4GB RAM + 64GB சேமிப்பு அளவில் அறிமுகமான மற்றொரு 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன்கள் கருப்பு (Diamond Black), நீலம் (Diamond Blue), மற்றும் சிவப்பு (Diamond Red) என மூன்று வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஜூலை 23 அன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ ஆன்லைன் தளங்களில் விற்பனையாகவுள்ளது.
 

ரியல்மீ 3i: சிறப்பம்சங்கள்!

ரியல்மீ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு அறிமுகமாகியுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் டியூட்ராப் நாட்சுடன் 6.22-இன்ச் திரை, 19:9  திரை விகிதம், 88.30 சதவிகித திரை-உடல் விகிதம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியொ P60 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவில் இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. மேலும், முன்புறத்தில் 13 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4,230mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4G, வை-பை, ப்ளூடூத் v4.2, ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.

Advertisement


 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sturdy body
  • Quick face recognition
  • Decent selfie camera
  • Smooth UI and app performance
  • Bad
  • Slow charging
  • Weak low-light camera performance
  • No stabilisation for video recording
 
KEY SPECS
Display 6.20-inch
Processor MediaTek Helio P60
Front Camera 13-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4230mAh
OS Android Pie
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme 3i, Realme 3i Specifications, Realme 3i Price in India, Realme

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Realme Note 80 6,300mAh பேட்டரி, 6.74-இஞ்ச் டிஸ்ப்ளே உடன் அறிமுகம்: விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியானது
  2. Lava Bold 2 5G இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு; Under-Display Fingerprint Scanner உறுதி
  3. iQOO Z11 165Hz டிஸ்ப்ளே, 9,020mAh பேட்டரியுடன் டீஸ்; சீனாவில் விரைவில் அறிமுகம்
  4. SanDisk Extreme Fit USB Type‑C Flash Drive இந்தியாவில் அறிமுகமானது.. அசத்தும் அம்சங்கள்
  5. Samsung Galaxy M17e 5G: 50MP கேமரா, 6,000mAh பேட்டரியுடன் மார்ச் 17ல் இந்தியாவில் அறிமுகம்
  6. OnePlus 15T வடிவமைப்பு மற்றும் நிறங்கள் சீனா வெளியீட்டுக்கு முன் அதிகாரப்பூர்வமாக வெளியீடு
  7. Oppo Find N6 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மார்ச் 17 அன்று சீனாவில் அறிமுகம்; கான்பிகரேஷன் மற்றும் நிறங்கள் உறுதி
  8. MacBook Neo vs MacBook Air (2026) ஒப்பீடு: இந்திய விலை, அம்சங்கள் மற்றும் பல
  9. DoT-இன் SIM Binding விதி என்ன? – மெசேஜிங் ஆப்ஸ் மற்றும் பயனர்களுக்கு இதன் தாக்கம்
  10. Poco C85x 5G இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு.. பல சுவாரஷ்ய அம்சங்களுடன்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.