‘ரியல்மி 3 ப்ரோ’ முதன்முறையாக இன்று சேலுக்கு வருகிறது: தள்ளுபடி, முழு விவரம் உள்ளே!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 29 ஏப்ரல் 2019 11:58 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மி 3 ப்ரோ, ரெட்மி நோட் 7 ப்ரோ-வுடன் போட்டியிடும்
  • ரியல்மி 3 ப்ரோ, 3 வித வண்ணங்களில் கிடைக்கும்
  • ஸ்னாப்டிராகன் 710 எஸ்.ஓ.சி-யை ரியல்மி 3 ப்ரோ பெற்றிருக்கிறது

Realme 3 pro: வாட்டர்-ட்ராப் நாட்ச், 6.3 இன்ச் ஸ்க்ரீன், குவால்கம் ஸ்னாப்டிராகன் 710 எஸ்.ஓ.சி உள்ளிட்ட வசதிகளை இந்த போன் பெற்றிருக்கும்

ரியல்மி 3 ப்ரோ(Realme 3 pro) போன், இன்று மதியம் 12 மணி முதல் இந்தியாவில் முதன்முறையாக விற்கப்பட உள்ளது. ஃப்ளிப்கார்ட் தளம் மூலமும் ரியல்மி தளம் மூலமும் இந்த போன் விற்கப்படும். ரெட்மி நோட் 7 ப்ரோவுக்குப் போட்டியாக ரியல்மி 3 ப்ரோ வெளியிடப்படுகிறது. வாட்டர்-ட்ராப் நாட்ச், 6.3 இன்ச் ஸ்க்ரீன், குவால்கம் ஸ்னாப்டிராகன் 710 எஸ்.ஓ.சி உள்ளிட்ட வசதிகளை இந்த போன் பெற்றிருக்கும். மூன்று வகைகளில் இந்த போன் சந்தையில் கிடைக்கும். 

ரியல்மி 3 ப்ரோ விலை:

ரியல்மி 3 ப்ரோவின் 4ஜிபி + 64ஜிபி வகை 13,999 ரூபாய்க்கும், 6ஜிபி + 64ஜிபி வகை மற்றும் 6ஜிபி+ 128ஜிபி வகைகள் முறையே 15,999 ரூபாய்க்கும் 16,999 ரூபாய்க்கும் விற்கப்பட உள்ளன. கார்பன் க்ரே மற்றும் நைட்ரோ ப்ளூ வண்ணங்களில் இந்த போனை வாங்க முடியும். 

ரியல்மி தளத்திலிருந்து, ரியல்மி 3 ப்ரோ போனை வாங்கும் முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு ரியல்மி பட்ஸ் இலவசமாக கொடுக்கப்படும். மேலும் ரியல்மி தளத்தில் இருந்து போனை, மொபிக்விக் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 1,500 ரூபாய் கேஷ்-பேக் கொடுக்கப்படும். 

ஃப்ளிப்கார்ட் தளம் மூலம் இந்த போனை, எச்.டி.எப்.சி கிரெடிட், டெபிட் கார்டுகள பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 1,000 ரூபாய் தள்ளுபடி கொடுக்கப்படும். ஃப்ளிப்கார்ட் பயனர்களுக்கு 6 மாத நோ காஸ்ட் இ.எம்.ஐ வசதியும் கொடுக்கப்படும். 

ரியல்மி 3 ப்ரோ சிறப்பம்சங்கள்:

Advertisement

ஆண்ட்ராய்டு 9 பைய் மூலம் இயங்கும் ரியல்மி 3 ப்ரோ போன், 6.3 முழு எச்.டி+ திரை, 19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, கொரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்பு, குவால்கம் ஸ்னாப்டிராகன் 710 எஸ்.ஓ.சி, 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் உட்கட்டமைப்பு, அட்ரினோ 6161 ஜிபியூ, 64ஜிபி/128ஜிபி சேமிப்பு வசதி கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளைப் பெற்றிருக்கும்.

கேமரா வசதியைப் பொறுத்தவரை, போனின் பின்புறத்தில் 16 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமரா, 5 மெகா பிக்சல் இரண்டாவது கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 25 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவையும் ரியல்மி 3 ப்ரோ பெற்றிருக்கிறது. 

கூடுதலாக ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 4,045 எம்.ஏ.எச் பேட்டரி, டூயல் சிம் சப்போர்ட், 4ஜி எல்.டி.இ, வைட்வைன் L1 இணைப்பு ஆகியவற்றை ரியல்மி 3 ப்ரோ கொண்டுள்ளது. 

Advertisement

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful and efficient SoC
  • Very good battery life
  • Cameras fare well under good light
  • Bundled fast charger
  • Bad
  • Average low-light camera performance
  • Laminated back scuffs easily
  • No USB Type-C port
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 25-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4045mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vivo V70 FE இந்திய விலை & வெளியீட்டு காலம் லீக்: எதிர்பார்க்கப்படும் விவரங்கள்
  2. Garmin ஸ்மார்ட்வாட்ச்களுக்கு WhatsApp ஆதரவு அறிமுகம்
  3. Powerbeats Pro 2 Nike ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்: Apple H2 சிப் மற்றும் ANC வசதியுடன்
  4. Oppo A6s 5G இந்தியாவில் அறிமுகம்: 6,500mAh பேட்டரி, MediaTek Dimensity 6300 சிப்செட் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  5. OnePlus 15T – சீனாவில் மார்ச் 24 அன்று அறிமுகம்... சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்
  6. Reliance Jio – வெளிநாட்டு பயணிகளுக்கு VoWiFi மூலம் இலவச SMS வசதி
  7. Poco X8 Pro Series இந்தியாவில் அறிமுகம்: 9,000mAh பேட்டரி, 50MP கேமரா – விலை & விவரங்கள் இதோ உங்களுக்காக
  8. OnePlus 15 மற்றும் OnePlus 13s-க்கு OxygenOS 16 அப்டேட்: மார்ச் 2026 பாதுகாப்பு புதுப்பிப்பு
  9. Poco X8 Pro Series இந்திய விலை லீக்; அறிமுகத்திற்கு முன் விவரங்கள் வெளியீடு
  10. iQOO Z11 Geekbench-ல் வந்தது; MediaTek Dimensity 8500 செயலியுடன் சீனாவில் விரைவில் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.