ரியல்மி 3 ப்ரோ இந்தியாவில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகிறது. ஆனால், ரிலீஸுக்கு முன்னரே அந்த போன் குறித்து தொடர்ந்து பரபரப்பான பல தகவல்கள் கசிந்து வருகின்றன. குறிப்பாக வெனிலா ரியல்மி 3 வேரியன்டை விட இந்த போன் சிறப்பானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ரியல்மி 3 ப்ரோ, ரெட்மி நோட் 7 ப்ரோ-வுடன் நேரடியாக மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி 3 ப்ரோ-வின் கேமரா திறனை வெளிக்காட்டும் வகையில் அந்த நிறுவனம் சார்பில் லோ-லைட்-ல் எடுக்கப்பட்ட பல படங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதேபோல, போனின் அமைப்புகள் குறித்தும் சமீபத்தில் தகவல் கசிந்தது. ரியல்மி 3 ப்ரோ குறித்து இதுவரை எங்களுக்குத் தெரிந்த தகவல்களின் தொகுப்பு இதோ.
ரியல்மி 3 ப்ரோ விலை:
ஏப்ரல் 22 ஆம் தேதிதான் போனின் விலை குறித்து நமக்கு அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படும். ஆனால், ரெட்மி நோட் 7 ப்ரோ போனுடன் இந்த போன் போட்டிபோடும் என்று தெரிகிறது. ரெட்மி நோட் 7 ப்ரோ, 13,999 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. அதேபோல ரியல்மி 3 ப்ரோவின், ரியல்மி 2 ப்ரோவின் விலையை ஒத்திருக்கலாம். அந்த போனின் விலை 13,990 ரூபாய்க்கு ஆரம்பிக்கிறது. ரியல்மி 3 ப்ரோவின் டீசர் பக்கம் ஃப்ளிப்கார்ட் தளத்தில் லைவ் ஆகியுள்ளது. ரியல்மி இ-ஸ்டோரிலும் போன் விற்பனை செய்யப்படலாம்.
எந்தெந்த வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் ரியல்மி 3, டைனமிக் கருப்பு, ரேடியன்ட் நீலம், க்ளாசிக் கருப்பு நிறங்களில் கிடைத்தது. ரியல்மி 3 ப்ரோ-வும் இந்த வகைகளில் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
ரியல்மி 3 ப்ரோ சிறப்பம்சங்கள்:
ஸ்னாப்டிராகன் 710 எஸ்.ஓ.சி-யை ரியல்மீ 3 ப்ரோ பெற்றிருக்கலாம் எனப்படுகிறது. ஆண்ட்ராய்டு 9.0 பைய் மூலம் இந்த போன் இயங்குகிறதாம். ஃபோர்ட்நைட் கேமிற்கான சப்போர்ட் உடன் வரும் இந்த போன், சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோவிற்கு போட்டியாக சந்தையில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6ஜிபி ரேமுடன் இந்த போன் இயங்கும் என கீக்பென்ச் தளம் கூறுகின்றது. மேலும் போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளே மற்றும் 3,960 எம்.ஏ.எச் பேட்டரி வசதியுடன் ரியல்மீ 3 ப்ரோ சந்தைக்கு வரலாம். 5GHz வை-ஃபை இணைப்பு ப்ளூடூத், ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற வசதிகளையும் இந்த போன் பெற்றிருக்கக்கூடும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்