ஸ்மார்ட் போன்களின் பின் பக்கத்தை மூட பயன்படும் கேஸிங்கிற்கு ஒரு புதிய பொருளை பயன்படுத்த முடியும் என்பதை போர்ச்சுகளைச் சேர்ந்த இகி மொபைல் போன் நிறுவனம் கண்டுபிடித்து செயல்படுத்தி வருகிறது.
கேஸிங்கிற்காக இதுநாள் வரை, உலோகம், பிளாஸ்டிக், கிளாஸ் போன்ற பொருட்கள் தான் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்தப் பொருட்களை மறுபடியும் சுழற்சி செய்து பயன்படுத்த முடியும் என்று சொல்வதற்கில்லை. இந்நிலையில் இகி மொபை நிறுவனம் ‘கார்க்’ என்ற பொருளை வைத்து மொபைல் கேஸிங் தயாரித்து வருகிறது.
இந்தப் பொருள் போர்ச்சுகளில் விளைவிக்கப்படும் ‘கார்க்’-ல் இருந்து கிடைக்கப்பெறும். உலக அளவில் போர்ச்சுகல் தான் கார்க் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தனது உற்பத்தி ஆலையை வைத்திருந்த இகி, தற்போது போர்ச்சுகலுக்கு மாறி வருகிறது. இன்னும் சில நாட்களில் ஆலை மாற்றும் பணி முடிந்துவிடும் என்பதால், சீக்கிரமே அதிக அளவிலான ஸ்மார்ட் போன் தயாரிப்பு ஆரம்பமாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய முயற்சி குறித்து இகி நிறுவனத்தின் சி.இ.ஓ டிடோ கார்டோஸோ, ‘போர்ச்சுகல் நாட்டை தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த புதிய முயற்சியில் மும்முரம் காட்டுகின்றோம். கார்க் மூலம் தயாரிக்கப்படும் போனை பயன்படுத்துவதால் ஒரு தனிப்பட்ட உணர்வு பயனர்களுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறோம். கார்க் போனை பயன்படுத்தும் போது, அது குறித்து பயனர்கள் கண்டிப்பாக மகிழ்ச்சியடைவர்’ என்று பெருமிதத்தோடு கூறியுள்ளார்.
இந்த கார்க் கேஸிங் வெறுமனே வித்தியாசமான முயற்சி என்று மட்டும் பெயர் வாங்கவில்லை. வெப்பத்திலிருந்து, சத்தத்திலிருந்து, அதிர்வுகளிலிருந்து போனை காப்பாற்றும் ஆற்றல் அதற்கு இருக்கிறது. மேலும், பேட்டரி கதிர்வீச்சுகளிலிருந்து கார்க் கேஸிங் பயனர்களை பாதுகாக்கும்.
கார்க் கேஸிங்கை இன்னும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்ற வடக்கு போர்ச்சுகலில் இருக்கும் மினோ பல்கலைக்கழகத்துடன் இகி மொபைல் நிறுவனம் இணைந்து வேலை செய்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு கார்க் கேஸிங் மூலம் தயாரிக்கப்பட்ட 400,000 போன்களை இகி நிறுவனம் விற்றது. இந்த முறை அந்த இலக்கை கடக்க முயற்சி எடுத்து வருகிறது. கார்க் கேஸிங், கருப்பு முதல் காவி நிறம் வரை சந்தைகளில் கிடைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்