ஓப்போ ரெனோ 3 அதன் 5 ஜி மாடல் அறிமுகமான 4 மாதங்களில் 4ஜி வேரியண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ரெனோ-சீரிஸ் போன் வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்பிளேவுடன் வருகிறது மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
Oppo Reno 3 4G வேரியண்ட் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், அடிப்படை 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் சிஎன்ஒய் 3,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.35,900)-ல் தொடங்கும், அதன் 5ஜி விலையை விட இது குறைவாக இருக்கும். இந்த போன் தற்போது Oppo இலங்கை தளத்தில் அரோரல் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் கலர் ஆப்ஷன்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
டூயல் சிம் (நானோ) ஓப்போ ரெனோ 3 4ஜி வேரியண்ட், ColorOS 7 உடன் Android 10-ல் இயக்குகிறது மற்றும் 6.4 இன்ச் ஃபுல் எச்டி + (1080x2400 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், போனில் MediaTek Helio P90 (MT6779V) SoC உள்ளது, அதோடு 8 ஜிபி ரேம் உள்ளது. இது முக்கியமாக ரெனோ 3 5ஜி ஆப்ஷனைப் போலல்லாமல் octa-core 7nm MediaTek Dimensity 1000L 5G SoC மற்றும் 12 ஜிபி ரேம் வரை உள்ளது.
குவாட் ரியர் கேமரா அமைப்பில் எஃப்/1.8 லென்ஸுடன் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், டெலிஃபோட்டோ எஃப்/2.4 லென்ஸுடன் 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், வைட் ஆங்கிள் எஃப் / 2.2 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் மற்றும் ஒரு எஃப் / 2.4 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் ஆகியவை அடங்கும்.
செல்பி எடுப்பதற்காக, ஓப்போ ரெனோ 3 4ஜி மாடலில் எஃப்/2.4 லென்ஸுடன் 44 மெகாபிக்சல் கேமரா சென்சார் முன்புறத்தில் உள்ளது.
ஓப்போ ரெனோ 3 4ஜி வேரியண்டில் 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB ஆகியவை அடங்கும். இந்த போன் 4,025 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. தவிர, இது 160.2x73.3x7.9 மிமீ அளவு மற்றும் 170 கிராம் எடையைக் கொண்டுள்ளது.
Is Redmi Note 9 Pro the new best phone under Rs. 15,000? We discussed how you can pick the best one, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்