Photo Credit: Twitter / @Hackersimar
Oppo Reno 2 தொடர் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் முதலில் இந்தியாவிலேயே அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 10 அன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்கு முன்னதாக, Oppo Reno 2 பற்றி பல டீசர்களை இந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது, இந்த ஸ்மார்ட்போன்களின் முக்கிய சிறப்பம்சங்களும் அதில் அடங்கும். இந்த புதிய Oppo Reno 2 ஸ்மார்ட்போன்களில், முன்பு இருந்தது போலவே சார்க் ஃபின் ரைசிங் செல்பி கேமரா தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்றைய அறிமுக நிகழ்வில், Oppo Reno 2 ஸ்மார்ட்போன் மட்டுமின்றி Oppo Reno 2Z மற்றும் Oppo Reno 2F என இரண்டு ஸ்மார்ட்போன்களும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள், சாதாரன செல்பி கேமரா தொழில்நுட்பம் கொண்டு செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Oppo Reno 2 ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்ச்சி இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு துவங்கவுள்ளது. இந்த அறிமுக நிகழ்ச்சி, ஓப்போ நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது. இந்த புதிய ஓப்போ ஸ்மார்ட்போனின் விலை, எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல்கள் இந்த அறிமுக நிகழ்ச்சியில் வெளியிடப்படும். இந்த ஸ்மார்ட்போன்கள் விலை பற்றி, இதுவரை எந்த தகவலும் வெளியாகிய வண்ணம் இல்லை. இந்த ஸ்மார்ட்போனின் சமீபத்திய டீசர்கள், Oppo Reno 2 ஸ்மார்ட்போன் ஓசன் ஹார்ட் (Ocean Heart) மற்றும் மிஸ்டி பவ்டர் (Misty Powder) என இரண்டு வண்ணங்களில் வெளியாகும் என்பதை குறிப்பிடுகிறது. இந்த நிகழ்ச்சியில், மேலும் பல வண்ணங்களில் Oppo Reno 2 அறிமுகப்படுத்தப்படலாம்.
இந்த ஸ்மார்ட்போனிற்கான நேரலையை கீழே காணுங்கள்:
Oppo Reno 2 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு பற்றி பேசுகையில், முன்னதாக வெளியான பல டீசர்கள் அதை குறிப்பிடுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. எந்த ஒரு நாட்சும் இல்லாத முழு நீல முன்புற திரை, சார்க் ஃபின் ரைசிங் செல்பி கேமரா தொழில்நுட்பம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த நிறுவனம், Oppo Reno 2 ஸ்மார்ட்போனை மேலும் பல வகைகளில் அறிமுகப்படுத்தலாம், தற்போது கசிந்துள்ள தகவல்களின்படி, இந்த ஸ்மார்ட்போனுடன் Oppo Reno 2Z மற்றும் Oppo Reno 2F என மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனம் Oppo Reno 2 ஸ்மார்ட்போன் 20:9 திரை விகிதத்துடனான 6.55-இன்ச் AMOLED பனோரமிக் நாட்ச் இல்லாத முழு நீல திரையை கொண்டிருக்கும் எனபதை அறிவித்திருந்தது. இந்த ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு, 93.1 சதவித திரை-உடல் சதவிகிதம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. 8GB RAM உடன் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் ஸ்னேப்டிராகன் 730G SoC ப்ராசஸரை கொண்டு செயல்படுகிறது. VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 வசதியுடன் 4,000mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஓப்போ ஸ்மார்ட்போன். மேலும், டைப்-C சார்ஜிங் போர்ட் இணைப்பு வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
அல்ட்ரா டார்க் மோட், போக்கே மோட் போன்ற பல வசதிகளை மேம்படுத்த இந்த ஸ்மார்ட்போன் பிரத்யேகமாக நியூரல் ப்ராசஸிங் யூனிட் (Neural Processing Unit (NPU)) என்ற ஒரு சிறப்பு வசதியை கொண்டிருக்கும். இதற்கு முந்தைய ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடுகையில் இந்த ஸ்மார்ட்போன் 25 சதவீதம் வேகமாக கிராஃபிக் ரெண்டரிங் திறனை கொண்டுள்ளது. கேமிங்கிற்கென Game Boost 3.0, கேம் அசிஸ்டன்ட் மற்றும் HDR10 கேமிங் வசதி ஆகியவற்றை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. Oppo Reno 2 ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வளைந்த 3D பின்புற கிளாஸ் பேனலை கொண்டிருக்கும். அனைத்திற்கும் மேலாக இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார் கேமராவை கொண்டிருக்கும். இந்த அனைத்து அம்சங்களையும் ஓப்போ நிறுவனம் உறுதி செய்துள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றி சில தகவல்கள் கசிந்துள்ளன, அவற்றில் முக்கியமானவை கேமராக்கள். நான்கு பின்புற கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 13 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல், 2-மெகாபிக்சல் என மேலும் மூன்று கேமரா சென்சார்கள் இடம்பெற்றிருக்கும் என இந்த கசிவு குறிப்பிடுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2x அப்டிகல் ஜூம், 5x ஹைபிரிட் ஜூம், 20x ஹைபிரிட் ஜூம், OIS மற்றும் EIS வீடியோ நிலைப்பாடு, 60fps ப்ரேம் ரேட்டுடன் மிகவும் நிலையான விடியோவை எடுக்கும் திறன், மற்றும் s 116-டிகிரி வரை விரிந்த வீடியோவை எடுக்கும் திறன் ஆகியவற்றை கொண்டுள்ளது.
Oppo Reno 2Z ஸ்மார்ட்போன் 19.5:9 திரை விகிதத்துடனான 6.53-இன்ச் FHD+ (1,080 x 2,340 பிக்சல்கள்) திரை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை கொண்டுள்ளது. 8GB RAM உடன் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P90 SoC ப்ராசஸரை கொண்டு செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 256GB வரையிலான சேமிப்பு அளவை கொண்டுள்ளது. VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 வசதியுடன் 4,000mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஓப்போ ஸ்மார்ட்போன்.
கேமராவை பொருத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமராக்களுடன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல், இரண்டு 2 மெகாபிக்சல் என நான்கு கேமரா சென்சார்களை கொண்டுள்ளது. 2x அப்டிகல் ஜூம், EIS வீடியோ நிலைப்பாடு, 60fps ப்ரேம் ரேட்டுடன் மிகவும் நிலையான விடியோவை எடுக்கும் திறன், அல்ட்ரா-நைட் மோட் வசதி ஆகியவற்றை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும்.
Oppo Reno 2Z ஸ்மார்ட்போன் 19.5:9 திரை விகிதத்துடனான 6.53-இன்ச் FHD+ (1,080 x 2,340 பிக்சல்கள்) திரை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை கொண்டுள்ளது. 8GB RAM உடன் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P70 SoC ப்ராசஸரை கொண்டு செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 128GB வரையிலான சேமிப்பு அளவை கொண்டுள்ளது.
கேமராவை பொருத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமராக்களுடன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, இரண்டு 2 மெகாபிக்சல் கேமரா என நான்கு கேமரா சென்சார்களை கொண்டுள்ளது. 10x டிஜிட்டல் ஜூம், EIS வீடியோ நிலைப்பாடு, அல்ட்ரா-நைட் மோட் 2.0 வசதி ஆகியவற்றை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்