பட்ஜெட் பாப்-அப் செல்ஃபி ‘ஒப்போ K3’ போன் இன்று முதல் அமேசானில் விற்பனை!

விளம்பரம்
Edited by Barath Raj, மேம்படுத்தப்பட்டது: 23 ஜூலை 2019 11:36 IST
ஹைலைட்ஸ்
  • அமேசான் தளம் மூலம் ஒப்போ K3 விற்பனை செய்யப்படும்
  • அமேசான் பே மூலம் K3-ஐ வாங்கினால், ரூ.1000 கேஷ்-பேக் கொடுக்கப்படும்
  • ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் கேஷ்-பேக் வசதி உள்ளது

அமேசான் ஆன்லைன் தளத்தில் இன்று மதியம் 12 மணி முதல் இந்த போன் விற்பனையைத் தொடங்கும்.

ஒப்போ K3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த போன், இந்திய சந்தையில் அமேசான் தளம் மூலம் விற்பனை செய்யப்படும். கேம்பூஸ்ட் 2.0, டிசி டிம்மிங் உள்ளிட்ட வசதிகளுடன் வந்துள்ள இந்த K3, கேமிங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இளைஞர்களை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனில் அதிவேக சார்ஜிங்கிற்காக VOOC 3.0 சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஒப்போ K3, விவோ V15, ரியல்மீ X மற்றும் ரெட்மீ K20 போன்களுக்குப் போட்டியாக இருக்கும். 

ஒப்போ K3 விலை, ஆரம்ப ஆஃபர்கள்:

K3-யின் 6ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகை 16,990 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகை, 19,990 ரூபாய்க்கு விற்கப்படும். அமேசான் தளத்தின் மூலம் வரும் 23 ஆம் தேதி முதல் இந்த போனை வாங்கலாம். அரோரா ப்ளூ மற்றும் ஜேட் கருப்பு நிறங்களில் இந்த போனைப் பெற முடியும். 

அமேசான் ஆன்லைன் தளத்தில் இன்று மதியம் 12 மணி முதல் இந்த போன் விற்பனையைத் தொடங்கும்.

அமேசான் பே மூலம் இந்த போனை வாங்குபவர்களுக்கு 1000 ரூபாய் கேஷ்-பேக் கொடுக்கப்படும். அதேபோல ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி இந்த போனை வாங்கினாலும் 1000 ரூபாய் உடனடி கேஷ்-பேக் கொடுக்கப்படும். இந்த போனை வாங்குபவர்களுக்குக் கூடுதலாக 7,050 மதிப்புள்ள ஜியோ, லென்ஸ்கார்ட் பரிசு வவுச்சர் மற்றும் ஓயோ வவுச்சர் கூப்பன்கள் வழங்கப்படும். நோ காஸ்ட் இ.எம்.ஐ வசதியும் உள்ளது. 

ஒப்போ K3 சிறப்பம்சங்கள்:

இரண்டு நானோ சிம் வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. 6.5-இன்ச் அளவிலான FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் என்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரின்ட் சென்சாரையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பி கேமராவை கொண்டுள்ளது. பின்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் கேமரா என இரண்டு கேமராக்களை பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3,765mAh அளவிலான பேட்டரியையும் கொண்டுள்ளது. 

இந்த போனில் கூடுதலாக, ஏ.ஐ போர்ட்ரெய்ட் மோட் மற்றும் ஏ.ஐ சீன் டிடெக்‌ஷன் வசதி உள்ளது. இரவு நேரங்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் தெளிவாக இருக்க, அல்ட்ரா க்ளியர் நைட் வியூ 2.0 வசதியும் பொருத்தப்பட்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality, premium design
  • Vivid OLED display
  • Good overall performance
  • Fast autofocus, good cameras
  • Bad
  • Portrait mode isn’t always effective
  • A bit too large for some hands
  • Lack of microSD card slot could be a problem on 64GB model
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 3765mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo K3 price in India, Oppo K3 specifications, Oppo K3, Oppo
The resident bot. If you email me, a human will respond. ...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.