Oppo K13 Turbo தொடர் IPX6, IPX8 மற்றும் IPX9 நீர் எதிர்ப்பு மதிப்பீடுகளை பூர்த்தி செய்வதாகக் கூறப்படுகிறது
Photo Credit: Oppo
ஸ்மார்ட்போன் உலகத்துல, புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துறதுல Oppo எப்பவும் முன்னணியில் இருக்கும். அந்த வரிசையில, அவங்களுடைய புது வரவுகளான Oppo K13 Turbo மற்றும் Oppo K13 Turbo Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியால லான்ச் ஆகியிருக்கு. இந்த போன்களோட முக்கியமான அம்சம் என்னன்னா, கேமிங் மற்றும் பெர்ஃபார்மென்ஸுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் அதன் பிரத்யேக இன்-பில்ட் ஆக்டிவ் கூலிங் ஃபேன்தான். இது, ஸ்மார்ட்போன் வரலாற்றிலேயே ஒரு பெரிய மைல்கல்னு சொல்லலாம். அதோடு, பெரிய பேட்டரி, சக்திவாய்ந்த ப்ராசஸர் என பல சிறப்பம்சங்களுடன், இந்த போன்கள் சந்தையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கு. இந்த போன்கள் பத்தின விரிவான தகவல்களை நாம இப்போ பார்க்கலாம்.
முதலில், இந்த போன்களின் விலையைப் பற்றிப் பேசலாம். Oppo K13 Turbo Pro-வின் விலை ₹37,999-ல் தொடங்குகிறது. இது 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டுக்கான விலை. இதே மாடலில் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட ஒரு வேரியன்ட் இருக்கு, அதோட விலை ₹39,999 ஆகும். இந்த விலைக்கு, இந்த அளவு பிரீமியம் அம்சங்கள் கிடைப்பது அரிது.
அதே சமயம், Oppo K13 Turbo மாடலின் விலை ₹27,999-ல் தொடங்குகிறது. இது 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டுக்கான விலை. இதே மாடலில் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ₹29,999-க்கு கிடைக்கிறது. இந்த போன்கள் Flipkart, Flipkart Minutes, Oppo India e-store மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரீடெய்ல் கடைகள்ல ஆகஸ்ட் மாதம் 15 மற்றும் 18-ம் தேதிகளில் விற்பனைக்கு வரும்.
இந்த இரண்டு போன்களுமே, பிரீமியம் அம்சங்களுடன் வருது. இரண்டு போன்களிலுமே 6.8-இன்ச் AMOLED டிஸ்ப்ளே இருக்கு. இதுல 120Hz ரிஃப்ரெஷ் ரேட் இருக்கறதால, காட்சிகள் ரொம்பவே ஸ்மூத்தா இருக்கும். கேமராவுக்கு, இரண்டு மாடல்களிலும் பின்னாடி 50-மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார் இருக்கு. முன்னாடி, செல்ஃபிக்காக 16-மெகாபிக்சல் கேமரா இருக்கு.
பேட்டரியை பொறுத்தவரைக்கும், இந்த இரண்டு போன்களிலும் ஒரு பெரிய 7,000mAh பேட்டரி இருக்கு. இது ஒரு முழுமையான நாள் பயன்பாட்டுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கறதால, போனை சீக்கிரமா சார்ஜ் செஞ்சுக்கலாம். இந்த போன்களில், பில்ட்-இன் கூலிங் ஃபேனும், 7,000 சதுர மில்லிமீட்டர் கொண்ட வேப்பர் சேம்பரும் இருக்கறதால, அதிக நேரம் கேம் விளையாடினாலும் போன் சூடாகாம இருக்கும். இந்த ஃபேன் ஒரு நிமிஷத்துக்கு 18,000 முறை சுத்தும். இது இந்த போன்களின் முக்கியமான செல்லிங் பாயிண்ட்.
Oppo K13 Turbo Pro மாடலில், Qualcomm-ன் சக்திவாய்ந்த Snapdragon 8s Gen 4 ப்ராசஸர் இருக்கு. இது பிளாக்ஷிப் லெவல் பெர்ஃபார்மென்ஸை கொடுக்கும். இது 12GB LPDDR5X RAM மற்றும் 256GB UFS 4.0 ஸ்டோரேஜுடன் வருது. Oppo K13 Turbo மாடலில், MediaTek Dimensity 8450 ப்ராசஸர் இருக்கு. இதுவும் ஒரு பவர்ஃபுல்லான சிப்செட். இது 8GB LPDDR5X RAM மற்றும் 128GB அல்லது 256GB UFS 3.1 ஸ்டோரேஜுடன் வருது. இரண்டு போன்களுமே Android 15 அடிப்படையிலான ColorOS 15-ல் இயங்குது.
இந்த போன்கள், IPX6, IPX8, மற்றும் IPX9 ரேட்டிங்ஸ் உடன் வருவதால், நீர் மற்றும் தூசியிலிருந்து அதிக பாதுகாப்பு கிடைக்கும். குறிப்பாக, பில்ட்-இன் ஃபேனை கொண்ட ஒரு போன் இந்த அளவு வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டிருப்பது இதுவே முதல் முறை. இதன் நியான் டர்போ டிசைன், பின்பக்கத்தில் உள்ள RGB லைட்டிங் போன்ற அம்சங்கள் இளைஞர்களைக் கவரும் வகையில் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
...மேலும்