குவாட் கேமராவுடன் ஓப்போ ஏ 92 எஸ் அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 20 ஏப்ரல் 2020 11:50 IST
ஹைலைட்ஸ்
  • ஒப்போ ஏ 92 எஸ் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது
  • இந்த போன் ஏப்ரல் 29-ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு வரும்
  • ஒப்போ ஏ 92 எஸ்-ல் இரட்டை முன் கேமராக்கள் உள்ளன

ஒப்போ ஏ 92 எஸ் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வரை பேக் செய்கிறது

ஓப்போவின் சமீபத்திய ஸ்மார்ட்போனான Oppo A92s​ சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இது 5ஜி போனாகும். போனில், குவாட் கேமரா தொகுதி உள்ளது மற்றும் முன் இரட்டை துளை-பஞ்ச் டிஸ்பிளே உள்ளது. இந்த போன் ஏப்ரல் 29 ஆம் தேதி விற்பனைக்கு வரும். 


ஓப்போ ஏ 92 எஸ் விலை:

போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் சிஎன்ஒய் 2,199 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23,700),
அதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் சிஎன்ஒய் 2,499 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.27,000) ஆகும். 
இந்த போன் கருப்பு மற்றும் வெள்ளை கலர் ஆப்ஷன்களில், ஏப்ரல் 29 ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது.


ஓப்போ ஏ 92 எஸ் விவரங்கள்:

இந்த போன், 120Hz டிஸ்பிளே புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. சதுர வடிவ கேமரா தொகுதிக்குள் இருக்கும் குவாட் கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், இரட்டை செல்ஃபி கேமராக்கள் ஹோல்-பஞ்சில் உள்ளன.

ஓப்போ ஏ 92 எஸ்-ல் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இது பவர் பொத்தானாகவும் இருக்கிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo A92s, Oppo A92s Launch, Oppo A92s Price, Oppo A92s Specifications, Oppo
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.