இந்தியாவில் Oppo A9 2020 விலை ரூ.14,990-யாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Oppo A5 2020 உடன் இணைந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் Oppo A9 2020 அடிப்படை 4 ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.14,990-யாகவும், அதன் 8 ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.17,490-யாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.16,990 என்ற ஆரம்ப விலையில் அறிமுகமானது. அக்டோபரில் கடைசியாக விலைக் குறைப்பைப் பெற்றது, அதன் விலையை ரூ.15,990 ஆகும். புதிய விலை ஆஃப்லைன் கடைகள் மற்றும் Amazon உள்ளிட்ட ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கிறது.
Oppo, A9 2020-ஐ Marine Green, Spade Purple மற்றும் Vanilla Mint ஆகிய கலர் ஆப்ஷன்களில் வழங்குகிறது.
டூயல்-சிம் (நானோ) Oppo A9 2020, கலர்ஓஎஸ் 6.0.1 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. போனில் ஆக்டா கோர் Qualcomm Snapdragon 665 SoC உள்ளது. இது 8 ஜிபி வரை ரேம் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்கு, முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.
மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கக்கூடிய A9 2020-ல் ஒப்போ 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜை வழங்கியுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS மற்றும் USB Type-C ஆகியவை அடங்கும். ஸ்மார்ட்போனில் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. கடைசியாக, இது 5,000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்