அதிரடி விலைக்குறைப்பில் Oppo A5 2020!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 23 அக்டோபர் 2019 09:31 IST
ஹைலைட்ஸ்
  • Oppo A5 2020, Amazon மற்றும் Oppo e-shop-ல் ரூ. 11,990-க்கு கிடைக்கிறது
  • இந்த Oppo போனின் பின்புறத்தில் 12-megapixel முதன்மை கேமரா உள்ளது
  • reverse charging ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைப் பேக் செய்கிறது

Oppo A5 2020, quad rear கேமரா மற்றும் 16-megapixel selfie snapper-ஐ பேக் செய்கிறது

Oppo A5 2020, quad rear கேமரா அமைப்போடு கடந்த மாதம் Oppo A9 2020-யுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு மாதம் கழித்து Oppo A5 2020, ரூ. 500 நிரந்தர விலைக்குறைப்பைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் Oppo A5 2020-யின் விலை:

இந்தியாவில், Oppo A5 2020-யின் 3GB + 64GB ஸ்டோரேஜ் மாடலின் அறிமுக விலை ரூ. 12,490 ஆகும். ஆனால், விலைக்குறைப்பில் Amazon மற்றும் Oppo e-shop மூலம் ரூ. 11,990-க்கு வாங்கலாம். அதேபோல், 4GB + 64GB ஸ்டோரேஜின் விலை ரூ. 13,990-க்கு தற்போது கிடைக்கிறது. Oppo A5 2020-யை Dazzling White மற்றும் Mirror Black நிறங்களில் வாங்கலாம்.

Oppo A5 2020-யின் சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Oppo A5 2020 ColorOS 6.0.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 6.5-inch HD+ (720 x 1600 pixels) டிஸ்பிளேவுடன் 89% screen-to-body ratio, 480 nits peak brightness மற்றும் Gorilla Glass 3+ for protection ஆகிய அம்சங்கள் உள்ளன.  4GB RAM வரை இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது. reverse charging ஆதரவுடன் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவருகிறது.

Oppo A5 2020-யின் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் ஒரு பிரத்யேக microSD slot வழியாக 256GB வரை விரிவாக்கக்கூடியது. இந்த போனில் quad rear கேமரா அமைப்புடன், 12-megapixel முதன்மை கேமரா, 8-megapixel ultra-wide-angle கேமரா, 2-megapixel monochrome shooter மற்றும் 2-megapixel depth சென்சார் ஆகியவை அடங்கும். போனின் முன்பக்கத்தில் 8-megapixel செல்ஃபி கேமரா உள்ளது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo A5 2020, Oppo A5 2020 specifications, Oppo, Oppo A5 2020 Price in India
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங் கேலக்ஸி A27 5G அறிமுகம்: ஸ்னாப்டிராகன் சிப், 6.7-இன்ச் திரை மற்றும் சலுகைகள்!
  2. ஆப்பிள் விலை உயர்வு: மேக், ஐபேட் விலை அதிகரிப்பு, ஐபோன்களுக்கு விலக்கு
  3. Oppo Reno 16 முதல் பார்வைகள் (First Impressions)
  4. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 4 இந்தியாவில் அறிமுகம்: 52dB ANC மற்றும் 54 மணிநேர பேட்டரி லைஃப்
  5. லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் 5,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  6. வாட்ஸ்அப் நிறுவனம் தெரியாத எண்களிலிருந்து வரும் அரட்டைகள் (Chats) குறித்து பயனர்களை எச்சரிக்கத் தொடங்கியுள்ளது
  7. அமேசான் இந்தியாவின் விரைவு வர்த்தகம் 300 நகரங்களுக்கு விரிவாக்கம்; பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டம் அறிமுகம்!
  8. அசுஸ் ROG கேமிங், ப்ரோஆர்ட் லேப்டாப்கள் ரூ.1.99 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தன!
  9. ஜூன் 29 இந்திய அறிமுகத்தை உறுதி செய்தது சாம்சங் கேலக்ஸி M47 5G; முக்கிய அம்சங்கள் கசிவு!
  10. ஜூன் 26 சீனா அறிமுகத்திற்கு முன் விவோ எக்ஸ் ஃபோல்டு 6 விலை, சிறப்பம்சங்கள் கசிவு!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.