ஒன்பிளஸ் மாயம்! புதுசா அப்டேட் மாசாமாசம் வந்துகிட்டே இருக்கும்!

ஒன்பிளஸ் மாயம்! புதுசா அப்டேட் மாசாமாசம் வந்துகிட்டே இருக்கும்!

Photo Credit: OnePlus

ஹைலைட்ஸ்
  • ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கு மாதாந்திர புதுப்பிப்புகள
  • தகுதி சாதனங்களில் OnePlus 12, Pad 2, Nord 4 அடங்கும்.
  • புதுப்பிப்புகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கிடைக்கும்.
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது OnePlus செல்போன்கள் பற்றி தான். 


மே 1 முதல் இந்தியாவில் உள்ள 4500 ஒன்பிளஸ் ஸ்டோர்கள் இழுத்து மூடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த அதிருப்தியை சமாளிக்க இன்னொரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது குறிப்பட்ட மாடல் செல்போன்களுக்கு இனி மாதம் மாதம் அப்டேட் வந்து கொண்டே இருக்குமாம். 

இதன் பின்னணியில் இன்னொரு சம்பவம் நடந்திருக்கிறது. சமீபத்தில் OnePlus 8 மற்றும் OnePlus 8 Pro செல்போன் மாடல்கள் கடைசி சாப்ட்வேர் அப்டேட்டை பெறுவதாக அறிவித்தது. இனிமேல் இந்த போன்களுக்கு எந்த விதமான அப்டேட்டும் கிடைக்காது என்று அர்த்தம். இந்த மாடல் போன்களின் சாஃப்ட்வேர் அப்டேட் சைக்கிள் ஆனது முடிக்கு வந்துவிட்டதாக கூறியது. 

2020 ஏப்ரலில் அறிமுகமான இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் மற்றும் 3 முக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன் படி எல்லாமே கொடுக்கப்பட்டுவிட்டது. இனி லேட்டஸ்ட் மாடல் செல்போன்களில் கவனம் செலுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

அதன்படி ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் மென்பொருட்கள் மாதாந்திர அளவில் புதுப்பிக்கும் முறை ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கியது. இந்த புதுப்பிப்பு இந்தியா உட்பட மத்திய கிழக்கு மற்றும் ஆசியா-பசிபிக் பிராந்தியங்களில் படிப்படியாக தொடங்கியுள்ளது. இந்த அப்டேட்கள் வழக்கமான ஓவர்-தி-ஏர் (OTA) செயல்முறையைத் தவிர்த்து, புதிய அம்சங்களை கொண்டு வரும். இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய-பசிபிக் நாடுகளில் உள்ள பயனாளர்கள் இந்த வசதியை பெறுவார்கள்.  மேலும், UAE, குவைத், கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளும் அப்டேட் பொருந்தும். 

OnePlus  வெளியிட்ட தகவல்படி சமீபத்திய OxygenOS 14.00 மற்றும் அதற்கு மேல் இயங்கும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் OxygenOS 13.1.0 மற்றும் 13.00 போன்ற முந்தைய மாடல் போன்களுக்கு மட்டுமே இந்த அப்டேட் கிடைக்கும். எல்லா ஒன்பிளஸ் மாடல்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்காது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அப்டேட் பெற தகுதியான செல்போன் மாடல்களின் பட்டியல் 

OxygenOS 14.0.0 மற்றும் அதற்குமேல்  

OnePlus 12 Series

OnePlus Open

OnePlus 11 Series

OnePlus 10 Series

OnePlus 9 Series

OnePlus 8T

OnePlus Nord 4 5G

OnePlus Nord 3 5G

OnePlus Nord 2T 5G

OnePlus Nord CE 4 5G

OnePlus Nord CE 3 5G

OnePlus Nord CE 3 Lite 5G

OnePlus Nord CE 2 Lite 5G

OnePlus Pad

OnePlus Pad Go

OxygenOS 13.1.0

OnePlus 8

OnePlus 8 Pro

OxygenOS 13.0.0

OnePlus Nord 2 5G

OnePlus Nord CE 2 5G

 OnePlus Nord CE 5G


புதிதாக வந்துள்ள OnePlus Nord 4, OnePlus Pad 2, OnePlus Open மற்றும் OnePlus 12R ஆகிய மாடல் போன்களும் இந்த அப்டேட்களை பெறுகிறது. 
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus, OnePlus Update, oneplus 12 updates, OxygenOS, OxygenOS Update
Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »