Photo Credit: OnePlus
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது OnePlus Ace 5V செல்போன் பற்றி தான்.
மார்ச் 2024ல் சீனாவில் வெளியிடப்பட்ட OnePlus Ace 3V க்கு அடுத்தபடியாக OnePlus Ace 5V அறிமுகப்படுத்தப்படலாம். ஏற்கனவே OnePlus Ace 5 Pro மற்றும் OnePlus Ace 5 உடன் Snapdragon 8 Elite SoC சிப்செட் டிசம்பர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
OnePlus Ace 5V ஆனது MediaTek Dimensity 9350 SoC மூலம் இயக்கப்படலாம் என தெரிகிறது. இதில் எதிர்பார்க்கப்படும் மீடியா டெக் சிப்செட்டை "டைமென்சிட்டி 9300++" என்று அழைக்கலாம் என கூறப்படுகிறது. இது தற்போதுள்ள MediaTek Dimensity 9300 சிப்செட்டை விட அதிக மேம்படுத்தல்கள் மற்றும் அதிகரித்த ஆற்றல் திறனுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. MediaTek இன் Dimensity 9350 அல்லது Dimensity 9300++ SoC ஆனது Qualcomm வழங்கும் Snapdragon 8s Elite சிப்செட்டுடன் நேரடியாகப் போட்டியிடும்.
கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது 7,000mAh அல்லது அதிக திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டிருக்கும். இது உண்மை எனில் ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 3 SoC மற்றும் முழு HD+ தெளிவுத்திறன் கொண்ட AMOLED டிஸ்ப்ளே கொண்ட OnePlus Ace 3V மாடலின் 5,500mAh பேட்டரியை விட இது கணிசமான மேம்படுத்தலாக இருக்கும் . OnePlus Ace 5V பற்றிய கூடுதல் விவரங்கள் அடுத்த சில வாரங்களில் ஆன்லைனில் வெளிவரலாம்.
OnePlus Ace 3V ஆனது ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான ColorOS 14 உடன் வெளியிடப்பட்டது. இது 12GB ரேம் + 256GB மெமரி மாடல் தோராயமாக ரூ. 23,000 விலையில் வெளியிடப்பட்டது. கேமரா பொறுத்தவரையில் இது 50 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா யூனிட் மற்றும் 16 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது. இது 100W வயர்டு SuperVOOC சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், OnePlus Ace 3V செல்போன் மாடலில் சில மாற்றங்களுடன் OnePlus Nord 4 மாடல் இந்தியா மற்றும் பிற உலகளாவிய சந்தைகளில் வெளியிடப்பட்டது. எனவே, OnePlus நிறுவனம் OnePlus Ace 5V மாடலை ஒன்பிளஸ் நார்ட் 5 என சீனாவிற்கு வெளியே சந்தைகளில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் நம்பகத்தன்மையை தற்போது உறுதிப்படுத்த முடியவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்