OnePlus 7 மற்றும் OnePlus 7 Pro-விற்கான புதிய பீட்டா அப்டேட்டை வெளியிட தொடங்கியுள்ளது. OnePlus 7 மற்றும் OnePlus 7 Pro-வுக்கான OxygenOS Open Beta 8 அப்டேட் டிசம்பர் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் கொண்டு வந்து கணினி மற்றும் மென்பொருள் சிக்கல்களை சரிசெய்கிறது. மேலும், குறிப்பிடத்தக்க வகையில், இந்த OnePlus 7 duo-க்கு one-handed mode-ஐ அறிமுகப்படுத்துகிறது. ஒன்பிளஸ் சில காலமாக ஒரு one-handed mode-ல் செயல்பட்டு வருகிறது, இறுதியாக அதை பயனர்களுக்காக வெளியிட்டுள்ளது. பெயர் குறிப்பிடுவது போல, திரையின் கீழ் பாதியில் interface-ஐ கீழே இழுப்பதன் மூலம் ஒரு கையால் போனை பயன்படுத்துவதை one-handed mode எளிதாக்குகிறது.
OnePlus 7 மற்றும் OnePlus 7 Pro பயனர்களுக்கு OxygenOS Open Beta 8 அப்டேட் இப்போது வெளியாகியுள்ளது என்று ஒன்பிளஸ் மன்ற பதிவு கூறுகிறது. டிசம்பர் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருவதைத் தவிர, இந்த போன் பாக்கெட்டில் இருக்கும்போது குறைவான தற்செயலான தொடு உள்ளீடுகளை பதிவு செய்ய, மென்பொருளை மேம்படுத்துகிறது. கூடுதலாக, இது பயனர்கள் அனுபவிக்கும் black screen மற்றும் app crash சிக்கல்களை சரிசெய்கிறது. கடைசியாக, இது கணினி stability-ஐ மேம்படுத்துவதாகவும், பொதுவாக சில பிழைகள் தீர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சுவாரஸ்யமாக, OnePlus 7 மற்றும் OnePlus 7 Pro-வுக்கான OxygenOS Open Beta 8-ன் சேஞ்ச்லாக் one-handed mode-ன் வருகையைக் குறிப்பிடவில்லை. இருப்பினும், மன்ற பதிவின் கீழே உள்ள பயனர் கருத்துக்கள் one-handed mode இறுதியாக இரண்டு OnePlus 7 சீரிஸ் போன்களுக்கும் வழிவகுத்துள்ளது என்பதைக் குறிக்கிறது. இந்த பாதையைப் பின்பற்றுவதன் மூலம் பயனர்கள் அதைச் செயல்படுத்தலாம்: Settings > Buttons & Gestures > Quick Gestures > Enable one-handed mode. OnePlus 7 மற்றும் OnePlus 7 Pro பயனர்கள் திரையின் இடது அல்லது வலது விளிம்பிலிருந்து கீழே ஸ்வைப் செய்வதன் மூலம் one-handed mode-க்கு மாறலாம். வழக்கமான full-screen interface-க்கு மாற, எதிர் திசையில் ஸ்வைப் செய்யவும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்