OnePlus 5T மற்றும் OnePlus 5 ஆகியவை தங்கள் OxygenOS 9.0.9 அப்டேட்டுகளைப் பெறத் தொடங்கியுள்ளன என்று சீன நிறுவனம் ஒரு forum post மூலம் அறிவித்துள்ளது.
forum post-ல் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ changelog படி, OnePlus 5T மற்றும் OnePlus 5-க்கான OxygenOS 9.0.9 அப்டேட் அக்டோபர் 2019-ல் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகிறது. மென்பொருள் பதிப்பு விரிவாக்கப்பட்ட Screenshots அம்சத்துடன் ஒரு சிக்கலை சரிசெய்கிறது. மேலும், பொதுவான பிழை திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகள் உள்ளன.
"இந்த OTA-வானது ஒரு நிலையான ரோல்அவுட்டைக் கொண்டிருக்கும். OTA இன்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களால் பெறப்படும். மேலும், முக்கியமான பிழைகள் ஏதும் இல்லை என்பதை உறுதிசெய்த சில நாட்களில் பரந்த அளவிலான வெளியீட்டைப் பெறும்" என்று நிறுவனம் தனது forum post மூலம் தெரிவித்துள்ளது.
OnePlus 5T அல்லது OnePlus 5-யில் Settings > System > System Update-ற்கு சென்று சமீபத்திய OxygenOS பதிப்பின் கிடைக்கும் தன்மையை சரிபார்க்கலாம்.
சமீபத்திய OxygenOS அப்டேட், OnePlus 5T மற்றும் OnePlus 5-யில் இருக்கும் ஆண்ட்ராய்டு பதிப்பை மேம்படுத்தாது என்பதை முன்னிலைப்படுத்த வேண்டியது அவசியம். இருப்பினும், இந்த மாத தொடக்கத்தில் லண்டனில் OnePlus 7T தொடரை அறிமுகப்படுத்தியதில் OnePlus ஆண்ட்ராய்டு 10-ஐ கொண்டு வர இருப்பதாக அறிவித்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்