மொபைல் கேமிங்கை பிரத்யேகமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட் போன், சீனாவில் வரும் 28 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முன்னதாக நுபியா மேஜிக் மார்ஸ் போன் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது நுபியா ரெட் மேஜிக் 3 போன் ரிலீஸ் ஆகப் போகிறது. ஸ்னாப்டிராகன் 855 எஸ்.ஓ.சி, 12ஜிபி ரேம், 3,800 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்டவை இந்த போன்களின் சிறப்பம்சங்களாகும்.
நுபியா நிறுவனத்தின் பொது மேலாளர் நீ ஃபெய், இது குறித்த தகவலை உறுதி செய்துள்ளார். போன் குறித்த எந்தத் தகவலையும் ஃபெய் வெளியிடவில்லை என்றாலும், எந்த இடத்தில் போன் அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நுபியா நிறுவனம், நுபியா ஆல்ஃபா ஸ்மார்ட் வாட்ச் மற்றும் நுபியா பாட்ஸ் ஆகியவை மே மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியது. அது குறித்தும் கம்பெனி சார்பில் எந்த வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
அதே நேரத்தில் நுபியா ரெட் மேஜிக் 3 குறித்து ஃபெய் கடந்த மாதம் சில விவரங்களைக் கூறினார். போன் வெப்பமடைவதைத் தடுக்க காற்று மற்றும் நீர் கொண்ட கூலிங் அமைப்பு இருக்கும் என்று ஃபெய் தெரிவித்தார். ஸ்னாப்டிராகன் 855 எஸ்.ஓ.சி, 12ஜிபி ரேம், 3,800 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட வசதிகளும் போனில் வரும் என்றும் அவர் கூறினார். இதுவல்லாமல் 4டி வைப்ரேஷன் அமைப்பு நுபியா ரெட் மேஜிக் 3-ல் இருக்கும் எனப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்