Nothing Phone 3 இந்தியாவில் உருவாகிறது - மாடல் நம்பர் A024 உடன் கிளிஃப் இன்டர்பேஸ் மாற்றம்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 16 ஜூன் 2025 15:13 IST
ஹைலைட்ஸ்
  • Nothing Phone 3 சென்னை உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்படும்
  • கிளிஃப் இன்டர்பேஸில் மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது
  • சக்திவாய்ந்த ப்ராசஸர், பெரிய பேட்டரி, மேம்படுத்தப்பட்ட கேமரா சிஸ்டம் உள்ள

நத்திங் போன் 2 (படம்) போலல்லாமல், நத்திங் போன் 3 கிளிஃப் இடைமுகத்தைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை.

புதுமையான டிசைன்களுக்கும், தனித்துவமான அணுகுமுறைக்கும் பெயர் போன Nothing நிறுவனம், அவங்களோட அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனான Nothing Phone 3 பத்தி சூடான தகவல்களை வெளியிட்டு இருக்காங்க! இந்த போன் இந்தியாவில் தயாரிக்கப்பட போகுதுன்னு உறுதியான தகவல் வெளியாகி இருக்கு. அதுமட்டுமில்லாம, போனோட பின் பேனலின் ஒரு பகுதியை, மாடல் நம்பரோட சேர்த்து வெளியிட்டிருக்காங்க. இது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கு."மேட் இன் இந்தியா" உறுதி மற்றும் சென்னை உற்பத்தி மையம்,Nothing நிறுவனம், தங்களோட அனைத்து ஸ்மார்ட்போன்களையும் இந்தியாலேயே தயாரிச்சுட்டு வராங்க. அதே வரிசையில, Nothing Phone 3-ம் "மேட் இன் இந்தியா" போனாக வருதுன்னு உறுதிப்படுத்தப்பட்டுச்சு. சென்னையில இருக்குற Nothing-வோட உற்பத்தி மையத்துலதான் இந்த போன் தயாரிக்கப்படும். இந்த வசதியில 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்க்கறாங்க, அதுல 95% பெண்கள்ங்கிறது குறிப்பிடத்தக்கது.

Nothing-வோட இணை நிறுவனர் மற்றும் இந்தியா பிரசிடென்ட் ஆன Akis Evangelidis, "இந்தியா எங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு முக்கியமான சந்தையா இருந்துருக்கு. எங்க ஸ்மார்ட்போன்கள் எல்லாமே இங்கதான் தயாரிக்கப்பட்டிருக்கு, Phone (3)-ம் அந்த வரிசையில சேருது. நாங்க இங்க வளர்ச்சியை வேகப்படுத்துறப்போ, உள்ளூர் உற்பத்தி, திறமை மற்றும் புதுமைகளில எங்க முதலீட்டை இரட்டிப்பாக்குறோம். இது 'மேட் இன் இந்தியா' பார்வைக்கு முழுமையா ஒத்துப்போகுது. Phone (3) எங்க முதல் உண்மையான ஃபிளாக்‌ஷிப் போன், Nothing-ன் மிகச் சிறந்ததை வழங்கும். எங்க இந்திய பயனர்கள் இதை அனுபவிக்க ஆவலா இருக்கோம்"னு தெரிவிச்சிருக்காரு.

உள்ளூர் உற்பத்தி மூலம், செயல்திறனை அதிகரிக்கவும், தயாரிப்புக்கான கால அவகாசத்தைக் குறைக்கவும், சந்தை தேவைகளை விரைவாக பூர்த்தி செய்யவும் Nothing திட்டமிட்டுள்ளது. இது இந்தியச் சந்தையில் நிறுவனத்தின் இருப்பை மேலும் பலப்படுத்தும்.

பின் பேனல் டிசைன் மற்றும் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

Nothing நிறுவனம், Phone 3-ன் பின் பேனலின் ஒரு சிறிய பகுதியை டீசராக வெளியிட்டுள்ளது. இது Nothing Phone 3-ன் மாடல் நம்பரான A024-ஐ காமிக்குது. இந்த டீசர் போனோட டிரான்ஸ்பரென்ட் டிசைன் அம்சத்தைத் தக்க வச்சுக்கிட்டாலும், முந்தைய Nothing போன்களில் இருந்த பிரத்யேக 'கிளிஃப் இன்டர்பேஸ்' (Glyph Interface) முழுமையாக மாற்றப்படலாம் அல்லது இல்லாமலிருக்கலாம்னு ஒரு பெரிய மாற்றம் எதிர்பார்க்கப்படுது. அதற்குப் பதிலாக, டாட்-மேட்ரிக்ஸ் ஸ்டைல் டிஸ்ப்ளே அல்லது புதிய LED வடிவமைப்பு இருக்கலாம்னு தகவல்கள் கசிஞ்சிருக்கு.

Nothing Phone 3 ஆனது, ஜூலை 1-ஆம் தேதி அன்று "Come to Play" நிகழ்ச்சியில் உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த போன் ஒரு ஃபிளாக்‌ஷிப் பிராசஸரோட வரலாம்னு எதிர்பார்க்கப்படுது. Qualcomm Snapdragon 8 சீரிஸ் SoC அல்லது அதற்கு இணையான சிப்செட் இருக்கலாம். 5,000mAh பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. கேமராக்களைப் பொறுத்தவரை, ஒரு பெரிய பிரைமரி சென்சார் மற்றும் பெரிஸ்கோப்-ஸ்டைல் டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்ட மேம்படுத்தப்பட்ட டிரிபிள் கேமரா செட்டப் இருக்கலாம். Nothing CEO Carl Pei, Phone 3-ன் விலை சுமார் £800 (சுமார் ₹92,500) இருக்கலாம்னு குறிப்பிட்டிருந்தாலும், இந்திய சந்தைக்கான விலை சற்று குறைவாகவே (சுமார் ₹60,000 முதல் ₹70,000 வரை) இருக்கும்னு எதிர்பார்க்கப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

 ...மேலும்
        
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  2. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  3. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  4. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  5. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  6. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  7. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  8. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  9. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  10. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.