Android 10 அப்டேட் பெறும் Nokia 6.1 Plus!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 7 ஜனவரி 2020 15:56 IST
ஹைலைட்ஸ்
  • Settings-ல் அப்டேட்டை சரிபார்க்க பயனர்கள் பரிந்துரைக்கப்படுகிறார்கள்
  • HMD குளோபல் இம்மாதத்தில் ஆண்ட்ராய்டு 10-ஐ 6.1 பயனர்களுக்கு வழங்கும்
  • Nokia 2.1 போன்ற பழைய போன்கள் Q2 2020-ல் அப்டேட்டை பெற வேண்டும்

Nokia 6.1 Plus சமீபத்திய அப்டேட்டின் பதிப்பு v4.10C ஆகும்

Nokia 6.1 Plus தங்கள் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறத் தொடங்கியுள்ளதாக HMD குளோபல் அறிவித்துள்ளது. இந்த அப்டேட் டிசம்பர் 2019 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகிறது. மேலும், dark mode, gesture navigation மற்றும் smart reply போன்ற அம்சங்களை இயக்குகிறது. கடந்த ஆண்டு, Nokia 7.1, Nokia 6.1 மற்றும் Nokia 9 PureView போன்ற போன்கள் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறுவதைக் கண்டோம். இப்போது, Nokia 6.1 Plus-ம் அதைப் பெறுகிறது. இந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட், கூடுதல் செயலிக் கட்டுப்பாடுகள், புதிய UI மற்றும் பல விஷயங்களைக் கொண்டுவருகிறது.

நோக்கியா மொபைல் பிராண்ட் உரிமதாரரான HMD குளோபல், Nokia 6.1 Plus பயனர்களுக்கான ஆண்ட்ராய்டு 10-ன் வெளியீட்டை உறுதிப்படுத்த ட்விட்டருக்கு அழைத்துச் சென்றது. சமீபத்திய மென்பொருள் அப்டேட் over-the-air (OTA)-ஐ வெளியிடும். மேலும், இது பயனர்களுக்கு தொகுப்பாக வர வேண்டும். நீங்கள் இப்போது அப்டேட்டைப் பெறவில்லை எனில், Settings > About Phone > System updates > Check for update-ஐ சரிபார்க்கவும். அப்டேட்டின் வருகையை உறுதிப்படுத்தும் பயனர்கள் ட்விட்டரில் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிரத் தொடங்கியுள்ளனர். மேலும், இந்த ஸ்கிரீன் ஷாட்களின்படி, இந்த அப்டேடின் பதிப்பு எண் v4.10C மற்றும் அப்டேட்டின் அளவு 1302.7MB-யாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் டிசம்பர் 2019 பாதுகாப்பு இணைப்பையும் கொண்டுவருகிறது என்பதையும் ஸ்கிரீன் ஷாட்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஆண்ட்ராய்டு 10-க்கான ரோல்அவுட் ரோட்மாப்பை வெளிப்படுத்திய HMD குளோபல் இந்த மாதத்திலேயே Nokia 6.1, Nokia 7 Plus போன்ற பிற போன்கலுக்கும் அப்டேட்டை வெளியிடும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அப்டேட் 2020 முதல் காலாண்டில் Nokia 2.2, Nokia 3.1 Plus, Nokia 3.2 மற்றும் Nokia 4.2 ஆகியவற்றுக்கும் வெளியிடப்படும். அதன் பிறகு, இது Nokia 1 Plus, Nokia 5.1 Plus மற்றும் Nokia 8 Sirocco-விலும் வெளியிடப்படும்.

ரோட்மாப்பில்  Nokia 2.1, Nokia 3.1, Nokia 5.1 மற்றும் Nokia 1 ஆகியவை அடங்கும் - இந்த நான்கு போன்களும் ஆண்ட்ராய்டு 10-ஐ Q2 2020-ல் பெறும்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Android One and no software bloat
  • Sleek and compact
  • Vibrant display
  • Great performance
  • Bad
  • Low-light camera performance could be better
  • Fast charger not bundled
 
KEY SPECS
Display 5.80-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3060mAh
OS Android 8.1
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: , Android 10
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ₹90,000 போன் இப்போ ₹57,000-க்கு! Vivo X100 Pro மீது அமேசான் அதிரடி விலைக்குறைப்பு.. டீலை மிஸ் பண்ணிடாதீங்க
  2. இதுதான் சரியான நேரம்! Pixel 9 Pro Fold-க்கு அமேசான்ல ரூ. 52,000 தள்ளுபடி.. ஆஃபர் முடியறதுக்குள்ள அள்ளிக்கோங்க
  3. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  4. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  5. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
  6. கனவு விலையில் Vivo V50 5G! Flipkart-ல் மெகா டிஸ்கவுண்ட்.. 6000mAh பேட்டரி, Zeiss கேமரா இப்போ இவ்வளவு கம்மி விலையிலா?
  7. இனி பிளாக்ஷிப் போன் பட்ஜெட் விலையில்! Samsung Galaxy S24 FE இப்போ Amazon-ல் செம சீப்.. மிஸ் பண்ணிடாதீங்க
  8. ஸ்மார்ட்போன் ஹிஸ்டரிலயே இப்படி ஒரு பேட்டரியா? 7,400mAh உடன் மிரட்டும் iQOO 15 Ultra! கேமர்களுக்கு இதுதான் இனி ஒரே சாய்ஸ்
  9. பிக்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Google Pixel 10a எப்போ வருது தெரியுமா? டிசைன் மற்றும் கலர் டீசர் ரிலீஸ்
  10. விவோவோட அடுத்த தரமான போன் ரெடி! Geekbench-ல் மிரட்டும் Vivo V70 Elite.. பட்ஜெட்ல ஒரு பிளாக்ஷிப் போனா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.