டிச.5ல் நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

விளம்பரம்
Written by Sumit Chakraborty மேம்படுத்தப்பட்டது: 16 நவம்பர் 2018 17:38 IST
ஹைலைட்ஸ்
  • ஹெச்.எம்.டி குளோபல் டிசம்பர் 5 ஆம் தேதி வெளீயிட்டு நிகழ்ச்சியை நடத்துகிறத
  • இந்த நிகழ்ச்சி துபாயில் நடைபெற உள்ளது.
  • நோக்கியா 9-னின் பெண்டா-கேமிரா அமைப்பு வெளிப்படுத்தப்படுமென்று எதிர்பார்க்

துபாயில் டிசம்.5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் நோக்கியா மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Photo Credit: Twitter/ Juho Sarvikas

நோக்கியாவின் உரிமையாளரான ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் எண்ணற்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், தற்போது புதிய போன்களின் வெளியீட்டு நிகழ்ச்சி குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஹெச்.எம்.டி குளோபலின் தலைமை அதிகாரி, ஜூகோ சர்விகாஸ் துபாயில் டிசம்பர் 5 ஆம் தேதி தங்கள் நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த இருப்பதை #ExpectMore என்ற தலைப்பில் தெரியப்படுத்தியுள்ளார்.

எந்த போன்களை அறிமுகப்படுத்தவுள்ளார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், யுகத்தின் அடிப்படையில் ஹெச்.எம்.டி குளோபல் நோக்கியா 2.1 பிளஸ், நோக்கியா 8.1 மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9னை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்விகாஸ் தனது டிவிட்டர் பதிவின் மூலம் நிகழ்ச்சி நடக்க இருப்பதை உறுதி படுத்தியுள்ளார். #ExpectMore என்ற தலைப்பில் டீசர் இமேஜ் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். துபாயில் டிசம்பர் 5ல் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் எந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

சர்விகாஸ் பதிவிட்ட இமேஜின் மூலம் அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போனில் இரண்டில் மட்டும் டிஸ்பிளே நாட்ச் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதற்கு முந்தைய தகவலின் படி, நோக்கியா 8.1ல் நாட்ச் இருக்கும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. நோக்கியா 7.1 பிளஸ் உலகமுழுவதும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்த இரண்டு போன்களில் எது சீனாவில் வெளியான நோக்கியா எக்ஸ் 7ன் குளோபல் வேரியண்ட் என தெரியவில்லை.

டீசர் இமேஜில் காட்டப்பட்டிருக்கும் நாட்ச் இல்லாத ஸ்மார்ட்போன் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப்படும் நோக்கியா 9 ஆகும். இதற்கு முந்தைய தகவல்கள் பெண்டா கேமிராவினைக் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போனில் டிஸ்பிளே நாட்ச் இருக்காது என்பதை பரிந்துரைத்தது.

சமீபத்திய தகவலின் படி, நோக்கியா 9ல் ஆண்ட்ராய்டு 9 பையில் இயங்கும். 6.01 இன்ச் டிஸ்பிளேயுடன் அதன் பாதுகாப்பிற்கு கொரில்லா கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குவால்கம் ஸ்நாப் டிராகன் 845 SoC இருக்கும் என்று வதந்திகள் பரவி வருகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்டிருக்கும். ஒன்று அல்லது இரண்டு சிம்களை பயன்படுத்துவதுற்கான ஆப்ஷன்களுடன் 4,150 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.


 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent construction quality
  • Bright, vibrant HDR display
  • Android One
  • Bad
  • Specifications aren’t very competitive
  • Poor low-light camera performance
 
KEY SPECS
Display 6.18-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 13-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2244 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: HMD Global, Nokia, Nokia 9
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Realme P4 Lite 5G இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; வடிவமைப்பு மற்றும் பேட்டரி விவரங்கள் வெளியீடு
  2. iQOO Z11x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: 7,200mAh பேட்டரி, 50MP கேமரா
  3. MacBook Neo-க்கு டச் ஸ்கிரீன் அப்கிரேடு வர வாய்ப்பு குறைவு; Mark Gurman தகவல்
  4. Microsoft-ன் Gaming Copilot AI உதவியாளர் 2026-ல் Xbox Series X, Xbox Series S கன்சோல்களில் வரும்: வெளியான தகவல்
  5. Huawei Enjoy 90 Pro Max, Huawei Enjoy 90 Plus அறிமுக தேதி அறிவிப்பு: Kirin சிப்செட்டுடன் வரும்
  6. Hubble Space Telescope மற்றும் Euclid Space Telescope இணைந்து எடுத்த Cat’s Eye Nebula-வின் புதிய அதிசயப் படம்
  7. Apple மடிக்கக்கூடிய iPhone ‘iPhone Ultra’ என அறிமுகமாகலாம்: விலை, மெமரி விவரங்கள் கசிந்தது
  8. Nothing Phone 4a, Nothing Phone 4a Pro இந்தியாவில் விற்பனைக்கு: விலை, சலுகைகள், அம்சங்கள்
  9. Poco X8 Pro Series – வெளியீட்டு தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்
  10. ChatGPT-இல் Chats-ஐ Delete மற்றும் Archive செய்வது எப்படி? – படிப்படியாக நீக்கும் முறைகள் இங்கே
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.