புதிதாக அறிமுகமாகவுள்ள Nokia 2.4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் கசிந்தது!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 14 ஆகஸ்ட் 2020 16:01 IST
ஹைலைட்ஸ்
  • நோக்கிய 2.4 ஸ்மார்ட்போன் அடிப்படை வேரியன்டாக இருக்கும்
  • The phone may come in a single-SIM and dual-SIM variant
  • Nokia 2.4 is said to come in three colour options

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா உள்ளதாக கூறப்படுகிறது

நோக்கியாவின் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2.4 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

நோக்கியா தரப்பில் புதிதாக 2.4 ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. இது 2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி மற்றும் 3ஜிபி ரேம், 64ஜிபி மெமரி என இரு வேரியன்டுகளில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. நோக்கியா 2X சீரிஸின் ஒரே போன் இதுவே ஆகும். 

இதுதொடர்பாக நோக்கியா பவர் யூசர் தளத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி, நீலம், கிரே, பர்ப்பிள் என மொத்தம் மூன்று நிறங்களில் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் வருகிறது. கடந்தாண்டு நோக்கியா 2.2 அறிமுகம் செய்யப்பட்ட போது 3ஜிபி ரேமுடன் வந்தது. தற்போதும் அதே போல் ஒரு வேரியன்டும், அடிப்படையாக 2ஜிபி ரேம் கொண்ட ஒரு வேரியன்டும் வருகிறது. 

நோக்கியாவின் 2X சீரிஸில் 2ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் இந்த நோக்கிய 2.4 ஸ்மார்ட்போன் ஆகும்.  FCC பட்டியலின்படி, TA-1277, TA-1270, TA-1274, மற்றும் TA-1275 என நான்கு மாடல்கள் உள்ளன. இவற்றில் TA-1270 தவிர மற்ற அனைத்து மாடல்களும் ஒரே விதமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன. இதன் பேட்டரி சக்கதி 4,500 mAh என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் கீக்பெஞ்சில் தென்பட்டது. அதில் ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ P22 SoC பிராசசர், 2ஜிபி ரேம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், 6.5 இன்ச் நாட்ச் திரை, 13MP, 2MP டூயல் கேமரா, முன்பக்கத்தில் 5MP செல்ஃபி கேமரா இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

.


Poco M2 Pro: Did we really need a Redmi Note 9 Pro clone? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Nokia, Nokia 2 4, Nokia 2 4 specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  2. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  3. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  4. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  5. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  6. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
  7. Super Actua ஃபிலெக்ஸ் டிஸ்ப்ளே, HiLight உடன் Google Pixel 11 Pro Fold இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  8. Tensor G6, டிரிபிள் கேமராவுடன் Google Pixel 11, 11 Pro, XL இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  9. அதிகரித்து வரும் மெமரி விலைகளுக்கு மத்தியில் இந்தியாவில் விவோ X300 FE விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது
  10. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த சலுகைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.