Photo Credit: WinFuture
மோட்டோரோலா நிறுவனம் புதிதாக ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், இதிலுள்ள சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
மோட்டோரோலா நிறுவனம் ரேசர் 5ஜி என்ற ஸ்மார்ட்போன் குறித்து இன்று டீஸ் செய்துள்ளது. இது தொடர்பாக வின்ஃபியூச்சர் என்ற இணையதளத்தில் சில சிறப்பம்சங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, மோட்டோ ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் கேரா, குவால்காம் ஸ்நாப்டிராகன் 765G SoC பிராசசர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா ரேசர் 5G ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை:
இந்த ஸ்மார்டபோன் ஐரோப்பாவில் EUR 1,500 (இந்திய மதிப்பில் 1.29 லட்சம்) என்று விலை நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வரும் 10 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம். அப்போது புதிய விலை நிர்ணயம் குறித்து தெரியவரும்.
மோட்டோரோலா ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
இந்த ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் அளவிலான மடக்கு திரை, 2.7 இன்ச் அளவிலான செகன்டரி டிஸ்பிளே இருக்கலாம். மடக்கு ஸ்மார்ட்போனிற்கு ஏற்றவாறு டிசைன் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இ-சிம் வசதியும், ஒரு நானோ சிம் ஸ்லாட்டும் இருக்கலாம். ஆனால், 2,800 mAh சக்தி கொண்ட பேட்டரி மட்டுமே இருக்கக்கூடும்.
கேமராவைப் பொறுத்தவரையில் 48 மெகா பிக்சலுடன் கூடிய பிரைமரி கேரா, பக்கவாட்டில் எல்.இ.டி லைட், 20 மெகா பிக்சலுடன் செல்ஃபி கேமரா ஆகியவை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Is Android One holding back Nokia smartphones in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்