மோட்டோரோலா ரஸ்ர், ஏற்கனவே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், ஊரடங்கு காரணமாக இதுவரை விற்பனையைத் தொடங்கவில்லை. இறுதியாக, மே 8, வெள்ளிக்கிழமை (இன்று), மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனை செய்யத் தொடங்கும்.
மோட்டோரோலா ரேஸ்ர் (2019) மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போன் ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வர திட்டமிடப்பட்டது.
பின்னர் நிறுவனம் விற்பனை தேதியை ஏப்ரல் 15-க்கு ஒத்திவைத்தது. ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், விற்பனை தொடங்கவில்லை. இந்த போன் இறுதியாக வெள்ளிக்கிழமை (இன்று) விற்பனை தொடங்கும்.
Motorola Razr (2019) விலை ரூ.1,24,999 ஆகும். இந்த போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜுடன் கருப்பு நிறத்தில் கிடைக்கும். இந்த போனை பிளிப்கார்ட்டில் வாங்கலாம். இப்போது ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலத்தில் மட்டுமே டெலிவரி இருக்கும். சிவப்பு மண்டல வாடிக்கையாளர்கள் இப்போது ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய முடியாது.
இந்த போன் 6.2 இன்ச் நெகிழ்வான OLED டிஸ்ப்ளேவைப் பயன்படுத்துகிறது. போனுக்கு வெளியே 2.7 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே ஸ்னாப்டிராகன் 710 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
இந்த போனில் 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்த போனின் டிஸ்ப்ளேவுக்கு மேல் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா இருந்தாலும், முதன்மை கேமராவைப் பயன்படுத்தி போனின் வெளியே ஒரு சிறிய டிஸ்ப்ளே மூலம் செல்பி எடுக்கலாம். இந்த கேமராவை வீடியோ அழைப்புகள் செய்ய பயன்படுத்தலாம்.
போனின் இணைப்பிற்காக, 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதில் ஆப்டிகல் கைரேகை சென்சார் உள்ளது. போனின் உள்ளே 2,510 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த போனின் எடை 205 கிராம் ஆகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்