இன்று வெளியாகிறது Moto G8 Plus!

இன்று வெளியாகிறது Moto G8 Plus!

Photo Credit: WinFuture

Moto G8 Plus, 4GB RAM அமைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஹைலைட்ஸ்
  • Moto G8 Plus,டிரிபிள் ரியர் கேமராவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • laser autofocus system-ஐ சேர்க்க இந்த போன் முனைகிறது
  • Blue மற்றும் Red glossy finishes வரும் என்று வதந்தி பரவியுள்ளது
விளம்பரம்

Moto G8 Plus இன்று பிரேசிலில் அறிமுகமாக உள்ளது. இந்த போனின் வெளியீடு பிரேசில் நேரப்படி காலை 9.30 மணிக்கும், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறும்.


Moto G8 Plus-ன் விலை (எதிர்பார்க்கப்படுபவை)

போனின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், ரெண்டர்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வந்துள்ளன. நினைவுகூற, Moto G7 Plus, EUR 299.99 (சுமார் ரூ. 23,600) விலைக்குறியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வந்திருக்கும் இந்த போனின் விலை அதே வரம்பிலோ, அல்லது சற்று அதிகமாகவோ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லெனோவா பிராண்டுக்கு சொந்தமான Moto G8 Play, vanilla Moto G8, Moto E6 Play போன்களும் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Moto G8 Plus-ன் வடிவமைப்பு (எதிர்பார்க்கப்படுபவை)

Moto G8 Plus-ன் கசிந்த டெண்டர்கள் மூன்று கேமரா அமைப்பு, gradient back panel finish, waterdrop-style notch,  டிஸ்பிளேவுக்கு அடியில் slight chin மற்றும் rear fingerprint சென்சார் ஆகியவற்றைக் குறிக்கின்றன. போனில், dual rear end speakers, USB Type-C port மற்றும் volume மற்றும் வலது புறத்தில் power பொத்தான்கள் இடம்பெறும் என்று நம்பப்படுகிறது. இந்த போன் Blue மற்றும் Red gradient glossy finishes கைப்பற்ற உள்ளது. ஆனால், துவக்கத்தில் அதிக வண்ண விருப்பங்களில் வரக்கூடும்.


Moto G8 Plus விவரக்குறிப்புகள் (எதிர்பார்க்கப்படுபவை)

Android 9 Pie-யால் Moto G8 Plus இயங்கும் என்றும், 6.3-inch full-HD (1080x2280 pixels) IPS டிஸ்பிளே இடம்பெறும் என்றும் சமீபத்திய கசிவு தெரிவிக்கிறது. இந்த போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, Snapdragon 665 octa-core SoC-யால் இயக்கப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது. Onboard storage-ல் 64GB மற்றும் 128GB ஆப்ஷனை வழங்குவதோடு, microSD card வழியாக விவாக்கத்தையும் ஆதரிக்கிறது. 

இந்த தொலைபேசி ஸ்னாப்டிராகன் 665 ஆக்டா கோர் SoC ஆல் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. உள் சேமிப்பு 64 ஜிபி மற்றும் 128 ஜிபி விருப்பங்களில் வழங்கப்பட வேண்டும், மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக மேலும் விரிவாக்கம் ஆதரிக்கப்படும்.

கேமராவை பொறூத்தவரை, 48-megapixel main shooter, 117-degree field of view உடன் 16-megapixel wide-angle கேமரா மற்றும் 5-megapixel depth சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது Moto G8 Plus. fourth cut-out என்பது laser autofocus system-கான கவனம், துல்லியமாகவும் விரைவாகவும் இருக்க அனுமதிக்கிறது. முன்பக்கத்தில், 25-megapixel selfie snapper-ஐ பேக் செய்கிறது.

Moto G8 Plus, 4,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. மேலும், 3.5mm audio jack மற்றும் rear fingerprint scanner உள்ளது என்று வதந்தி பரவியது. இணைப்பு விருப்பங்களில் Bluetooth v5, LTE, dual-SIM support, wireless LAN, LTE Cat 13, dual band Wi-FI, NFC ஆகியவை அடங்கும். இந்த போன் 188 கிராம் எடை மற்றும் 9.1mm தடிமனுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »