மோட்டோவின் அடுத்த தயாரிப்பான மோட்டோ ஜி-7 பவர் இன்று இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகவுள்ளது. மோட்டோவின் ஜி-7 குடும்பத்தை சேர்ந்த இந்த தயாரிப்பு ரூபாய் 13,999 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் அந்நிறுவனம் சார்பாக வெளியாகியுள்ள தகவல்கள் படி ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் 60 மணிநேரம் வரை போனின் பேட்டரி லைஃப் தாங்கும் என்ற கருத்து வெளியாகியுள்ளது.
மோட்டோவின் டர்போ சார்ஜிங் டெக்னாலஜி மற்றும் முக்கிய அம்சங்களான 6.2 இஞ்ச் திரை, குவால்கம் ஸ்னாப்டிராகன் 632 எஸ்.ஓ.சி மற்றும் 5,000mAh பேட்டரியுடன் வெளியாகுகிறது. மேலும் இந்த மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வசதியுடன் ரூபாய் 13,999 விற்பனைக்கு வெளியாகுகிறது.
செராமிக் பிளாக் நிறத்தில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் தளமான பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வெளியாகுகிறது.மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ் மற்றும் மோட்டோ ஜி7 பிளே போன்களுடன் அமெரிக்காவில் இந்த போன்கள் அறிமுகமாகிய நிலையில் இந்த போன்கள் ரூபாய் 17,000 அங்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இரண்டு சிம்கார்டுகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பையில் இயங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 12 மெகாபிக்சல் பின்புறம் கேமராவும், 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வெளியாகுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்