Photo Credit: Twitter/ Manu Kumar Jain
இந்தியாவில் 'Mi பாப் 2019' நிகழ்வை நடத்த சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த நிகழ்வு இந்தியாவில் மே 17 அன்று நடைபெறும் என்ற அறிவிப்பை சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ளது. Mi ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்களை தரும் வகையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இதற்கும் மேலாக, ரெட்மீ K20, K20 Pro அறிமுக மேடையாக இந்த நிகழ்வு இருக்கும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகமானது. இந்தியாவில் எப்போது இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என்ற உறுதியான தகவல் வெளிவராத நிலையில், இந்த ஸ்மார்ட்போன்கள் ஜூலை மாதத்தில்தான் இந்தியாவில் அறிமுகமாகும் என சியோமி நிறுவனம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மனு குமார் ஜெய்ன் இந்த 'Mi பாப் 2019' நிகழ்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். கடந்த புதன்கிழமையன்று இவர் தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்ட தகவலின்படி, இந்த 'Mi பாப் 2019' நிகழ்வு புது டெல்லியில் ஜூலை 17 அன்று நடைபெறவுள்ளது. சியோமி நிறுவனம் தனது ஐந்தாவது பிறந்தநாளை 'Mi பாப் 2019' நிகழ்வின் மூலம் கொண்டாடவுள்ளது.
இந்த நிகழ்விற்கென பிரத்யேகமாக ஒரு இணைய பக்கத்தையும் சியோமி நிறுவனம் துவங்கியுள்ளது. அந்த பக்கத்தில் இந்த நிகழ்விற்கான டிக்கெட்களும் விற்பனையாகி வருகிறது. இந்த நிகழ்வின் ஒரு டிக்கெட்டிற்கான விலை 500 ரூபாய்.
இன்னும் சியோமி நிறுவனம் எந்த ஒரு தகவலையும் உறுதியாக கூறாத நிலையில், இந்த நிகழ்வில் ரெட்மீ K20, K20 Pro ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மே மாதம் சீனாவில் வெளியான இந்த ஸ்மார்ட்போன், 1 மில்லியன் அளவில் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்த ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனம், ஜூலை 15 அன்று தனது ஐந்தாவது ஆண்டு கொண்டாடத்தின்போது வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்