இந்த புத்தாண்டின் முதல் பாதியில் எல்.ஜி. 7 போனுக்கு ஆண்டிராய்டு 9பை அப்டேட்ஸ் கிடைக்கும் என்ற அறிவிப்பு வெளியானது.
சுமார் 29,990 ரூபாய் மதிப்புள்ள இந்த வகை ஸ்மார்ட் போனில், ஆண்டிராய்டு பை-யை வைத்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து அது வெற்றிகரமாக செயல்படுகிறது என்ற அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரியாவில் முதலில் வெளியிடப்படும் இந்த வகை ஸ்மார்ட் போன் மற்ற நாடுகளுக்கு எப்போது விற்பனைக்கு வரும் என்று இன்னும் உறுதியாக தகவல் வெளியாகவில்லை.
வழக்கமாக கொரியாவில் வெளியான பிறகு மற்ற நாடுகளில் வெளியாகும் என்பதால் இந்த புதிய அப்டேட்டை விரைவில் எதிர்பார்க்கலாம்.
இந்த அப்டேட் வெளியாகும் தேதி இன்னும் அறியப்படவில்லை என்ற நிலையில் எந்த போன்களுக்கு இந்த அப்டேட் கிடைக்கும் என்ற தகவலும் இல்லை.
மேலும் வந்துள்ள தகவல் படி எல்.ஜி நிறுவனம் 5ஜி ஸ்மார்ட் போன் ஆன ஜி7 த்ன்க்யூ (G7+ ThinQ) என்ற ஸ்மார்ட் போனை இந்த ஆண்டு வெளியிடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பல முன்னணி நிறுவனங்கள் ஆண்டிராய்டு 9 பையின் அப்டேட் பற்றிய தகவல்களை வெளியிட்ட நிலையில் இந்த அப்டேட் மூலம்
மேம்படுத்தப்பட்ட பேட்டரி, செயலிகளில் செயல்பாடு போன்ற பல புதிய அம்சங்களுடன் வெளிவரவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்