எல்ஜியின் புதிய ஃபோல்டர் 2 ஃபிளிப் போன் அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 14 ஏப்ரல் 2020 16:48 IST
ஹைலைட்ஸ்
  • எல்ஜி ஃபோல்டர் 2, 2.8 அங்குல QVGA பிரதான டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது
  • இந்த போன் ஸ்னாப்டிராகன் 210 SoC-யால் இயக்கப்படுகிறது
  • இது 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜையும் பேக் செய்கிறது

எல்ஜி ஃபோல்டர் 2-வில் AI Voice Service பொத்தான் உள்ளது

எல்ஜியின் புதிய ஃபோல்டர் 2 போன் அறிமுகம். இது டூயல்-ஸ்கிரீன் ஃபிளிப் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போன், எளிமையான போன்களை விரும்பும் நுகர்வோரை இலக்காகக் கொண்டுள்ளது.


எல்ஜி ஃபோல்டர் 2 விலை:

LG Folder 2-வின் விலை KRW 198,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,400) 
இந்த போன் ஏப்ரல் 17 முதல் தென் கொரியாவில் கிடைக்கும். 
இது புதிய பிளாட்டினம் கிரே மற்றும் வெள்ளை கலர் ஆப்ஷன்களில் வருகிறது. 


எல்ஜி ஃபோல்டர் 2 விவரங்கள்: 

LG-யின் புதிய ஃபோல்டர் 2 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 SoC-யால் இயக்கப்படுகிறது, இது 1 ஜிபி ரேம் கொண்டுள்ளது. இந்த போன், 2.8 இன்ச் QVGA டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது வெளியில் 0.9 அங்குல மோனோ டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. இது, text messages, calls, time battery life மற்றும் signal strength ஆகிய notifications-ஐ காட்டுகிறது.

இது 8 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை, மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கலாம். இந்த போன் 1470 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. இது 4 ஜி, புளூடூத் 4.1, வைஃபை மற்றும் ஜி.பி.எஸ்  ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த போன், text message மூலம் இருப்பிட தகவலையும் அனுப்புகிறது. 


எல்ஜி ஃபோல்டர் 2 முக்கிய அம்சங்கள்:

இதில் SOS Key மற்றும் AI Voice Service பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் உள்ள SOS விசை 1.5 விநாடிகளுக்குள் மூன்று முறை விரைவாக அழுத்துவதன் மூலம் முன்பே பதிவுசெய்யப்பட்ட எண்ணை அழைக்க பயனர்களை அனுமதிக்கிறது. 

இந்த hotkey பொத்தானை அழுத்துவதன் மூலம், வானிலை, தேதி, நேரம் மற்றும் எளிய கணக்கீடுகள் குறித்து கேள்விகளைக் கேட்கும்போது AI Voice service அங்கீகரித்து பதிலளிக்கிறது. எல்ஜி ஃபோல்டர் 2 தற்செயலாக டேட்டா கட்டணங்களைத் தடுக்க data security lock function-ஐ கொண்டுள்ளது.

 
KEY SPECS
Display (Primary) 2.80-inch
Rear Camera 2-megapixel
RAM 1GB
Storage 8GB
Battery Capacity 1470mAh
Resolution 320x240 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: LG, LG Folder 2
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. வாட்ஸ்அப் இருபடிச் சரிபார்ப்பு(Two-Step Verification) PINக்கு பதிலாக வலுவான பாஸ்வேர்டை அறிமுகப்படுத்தக்கூடும்
  2. கணக்கு மீட்டெடுப்பிற்காக 'செல்ஃபி வீடியோ' உள்நுழைவு முறையை கூகிள் அறிமுகப்படுத்துகிறது
  3. Boat Nirvana Eutopia 2 ANC இந்தியாவில் அறிமுகம்: 45dB ANC மற்றும் 80 மணிநேர பேட்டரி லைஃப்!
  4. OnePlus N6x இந்தியா அறிமுகத் தேதி வெளியானது: அசத்தல் வடிவமைப்பு மற்றும் வண்ண விவரங்கள்!
  5. Xiaomi Power Bank 5i இந்தியாவில் அறிமுகம்: பில்ட்-இன் கேபிளுடன் அசத்தும் விலை மற்றும் அம்சங்கள்
  6. Vivo S2 கசிவு: இந்தியாவில் அறிமுகமாகும் முன் இதன் விலை, சேமிப்பக விவரங்கள் வெளிவந்தன
  7. சாம்சங் அன்ப்பேக்டு 2026: Z ஃபோல்டு 8, ஃபிலிப் 8, வாட்ச் அல்ட்ரா 2 அறிமுகம்!
  8. சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 vs கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  9. ஆகஸ்ட் முதல் இந்தியாவில் ஐபோன் 17, ஐபோன் 17 புரோ மேக்ஸ் விலைகளை ஆப்பிள் உயர்த்தக்கூடும்: டிப்ஸ்டர் தகவல்
  10. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டுடன் கேலக்ஸி Z ஃபோல்டு 8 இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.