Lava Agni 3 இப்படி ஒரு செல்போன் வந்து இறங்க போகுது

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 1 அக்டோபர் 2024 11:58 IST
ஹைலைட்ஸ்
  • Lava Agni 3 செல்போன் அறிமுக தேதி வெளியானது
  • 6.78 இன்ச் அளவு கொண்ட HD+ டிஸ்பிளே உள்ளது
  • குவாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது

Lava Agni 3 5G could run on MediaTek Dimensity 7300 SoC

Photo Credit: Lava

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Lava Agni 3 5G செல்போன் பற்றி தான்.


Lava Agni 3 5G அக்டோபர் முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50 மெகாபிக்சல் பின்புற கேமரா அமைப்புடன் இரண்டு வண்ண விருப்பங்களில் வரும் என தெரிகிறது. MediaTek Dimensity 7300 SoC சிப் மூலம் இயக்கப்படும். இதற்கு முன்பு லாவா நிறுவனம் அறிமுகம் செய்த Lava Agni 2 ஸ்மார்ட்போனில் இருந்து இது எப்படி மேம்பாடுள்ளது என்பது போன்ற விபரங்களை அடுத்து பார்க்கலாம்.


Lava Agni 3 ஸ்மார்ட்போனில் நாம் 6.78" இன்ச் அளவு கொண்ட முழு HD+ டிஸ்பிளேவை எதிர்பார்க்கலாம். இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வெளிவர வாய்ப்புள்ளதென்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவது சிறிய டிஸ்பிளே ரியர் பேனலில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. கேமரா அம்சத்தை பற்றி பேசுகையில் Lava Agni 3 சாதனம் குவாட் ரியர் கேமரா அமைப்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 64MP + 8MP + 2MP + 2MP கேமரா சென்சார்களை அடக்கியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் உள்ளது.


மீடியாடெக் டைமென்சிட்டி 7050 சிப்செட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 8GB ரேம் உடன் 256GB ஸ்டோரேஜ் வரை இடம்பெற வாய்ப்பு அதிகம். குறிப்பாக, ரேம் பூஸ்ட் ஆதரவுடன் இந்த சாதனம் 16GB ரேம் சேவையை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போன் 4700mAh உடன் 66W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை பெரும். அதிகம் எதிர்பார்க்கப்படும் Lava Agni 3 ஸ்மார்ட்போன் சாதனமானது ஆண்ட்ராய்டு 14 உடன் லாவா சாப்ட்வேர் உடன் வெளிவருமென்று அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் சாதனமாக அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


லாவா அக்னி 3 வெளியீடு அக்டோபர் 4 ஆம் தேதி இந்தியாவில் மதியம் 12 மணிக்கு இந்திய அளவில் நடைபெறும். வெளியீட்டு நிகழ்வு YouTubeல் நேரடியாக ஒளிபரப்பப்படும். இது குறித்து லாவா நிறுவனத்தால் பகிரப்பட்ட டீஸர் வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. இப்போதைக்கு இரண்டு கலர் விருப்பங்களில் செல்போன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்புற பேனலின் மேல் இடது மூலையில் சதுர வடிவ கேமரா யூனிட் உள்ளது. Lava Agni 3 5G செல்போனின் கேமரா பகுதி மீது '50MP OIS' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 1TB வரை மெமரி கார்டை பயன்படுத்தி செல்போன் மெமரியை அதிகரித்துக்கொள்ளலாம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Lava Agni 3 5G, Lava Agni 3 5G Specifications, Lava
 ...மேலும்
        
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 13: புதிய பச்சை நிறத்தில் ஜூலை 4-ல் லான்ச்! Snapdragon 8 Elite SoC, 120W சார்ஜிங்குடன் மாஸ்!
  2. AI+ Nova 5G, Pulse: ஜூலை 8-ல் மாஸ் லான்ச்! ₹5,000-க்கு 5G போன்? 50MP கேமராவுடன் வருகிறது!
  3. Vodafone Idea அதிரடி: இனி Family Plan-ல Netflix இலவசம்! டேட்டா, OTT பலன்கள் அள்ளி வழங்கும் Vi!
  4. அறிமுகமாகிறது Tecno Pova 7 Ultra 5G: Dimensity 8350, 144Hz AMOLED, 6000mAh பேட்டரியுடன் வருகிறது!
  5. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  6. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  7. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  8. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  9. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  10. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.