Photo Credit: Infinix
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Infinix Zero Flip செல்போன் பற்றி தான்.
Infinix நிறுவனம் மலிவு விலையில் Infinix Zero Flip என்ற புதிய ஃபிலிப் ஸ்மார்ட்போன் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட LTPO AMOLED டிஸ்பிளேவை இது கொண்டிருக்கும். இதன் 2வது டிஸ்பிளே 3.64" இன்ச் அளவுடன் இருக்கும். பிலிப் ஸ்மார்ட்போன் சந்தையில் Google, Motorola, Samsung போன்ற பெரிய ஜாம்பவான் மொபைல் பிராண்டுகள் இப்போது ஆதிக்கம் காட்டி வருகின்றனர். இதனை உடைக்கும் விதமாக மலிவு விலை Infinix Zero Flip செல்போனை அறிமுகப்படுத்துகிறது Infinix நிறுவனம்.
Infinix Zero Flip செல்போன் 6.9 இன்ச் அளவு கொண்ட 1080 x 2640 பிக்சல் உடைய 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இதன் 2வது டிஸ்பிளே 3.64" இன்ச் அளவுடன் 1056 x 1066 பிக்சல் உடைய AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இந்த இரண்டு டிஸ்பிளேவும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பை பெறுகின்றன.
இந்த புதிய Infinix Zero Flip செல்போன் MediaTek Dimensity 8020 processor உடன் வரும். இது 16GB மொத்த ரேம் அம்சத்துடன் வருகிறது. இது 8GB LPDDR4X ரேம் உடன் 8GB விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வழங்குகிறது. இது 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த போனில் 50MP + 50MP கொண்ட டூயல் கேமராவை வழங்கப்பட்டுள்ளது. இது 32MP செல்பி கேமராவை கொண்டிருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 14 உடன் HiOS 14.5ல் இயங்கும் இயங்குதளத்தை கொண்டிருக்கும். இந்த போனில் AI அம்சமும் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. 4K வீடியோக்களை பதிவு செய்யலாம். கைபேசி GoPro ஒருங்கிணைப்பையும் வழங்குகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Infinix Zero Flip ஆனது JBL ஆல் டியூன் செய்யப்பட்ட இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆப்ஷன்களை பொறுத்தவரையில் 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 802.11ax (2.4GHz/5GHz), Bluetooth 5.2, GPS, USB Type-C, NFC ஆகியை இருக்கிறது. 4720mAh பேட்டரி மற்றும் 70W அல்ட்ரா சார்ஜ் தொழில்நுட்பத்துடன் வேகமாக சார்ஜ் ஏறும் நுட்பத்தை கொண்டுள்ளது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும்பொழுது இந்த போன் 50 ஆயிரம் விலையில் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்