பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் ஹானர் எக்ஸ் 10 அறிமுகம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 21 மே 2020 12:09 IST
ஹைலைட்ஸ்
  • ஹானர் எக்ஸ் 10-ல் கிரின் 820 சிப்செட் மற்றும் 8 ஜிபி ரேம் உள்ளது
  • புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் பாப்-அப் செல்பி கேமரா உள்ளது
  • இந்த போன், 5 ஜி இணைப்பு ஆதரவை மலிவு விலையில் கொண்டு வருகிறது

ஹானர் எக்ஸ் 10 டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது

ஹானர் எக்ஸ் 10 ஆன்லைன் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனம் 5 ஜி இணைப்பை குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஸ்மார்ட்போனில் 5 ஜி ஆதரவு மற்றும் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஆக்டா கோர் செயலி ஆகியவை உள்ளன. 


போனின் விலை:

ஹானர் எக்ஸ் 10 சீன இ-காமர்ஸ் தளமான விமாலில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜின் விலை 1,899 சீன யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20,200). அதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை 2,199 சீன யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23,400) மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரெஜின் விலை 2,399 சீன யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.25,500) ஆகும். 

இந்த போன் சில்வர், பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கும். ஹானர் எக்ஸ் 10-க்கான ஆர்டர் சீனாவில் தொடங்கியுள்ளது. இந்த போன் மே 26 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.
 

போனின் விவரங்கள்:

டூயல்-சிம் Honor X10 Android 10 உடன் மேஜிக் யுஐ 3.1.1-ல் இயங்குகிறது. இந்த போன் 6.63 அங்குல முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனின் உள்ளே ஆக்டா கோர் கிரின் 820 சிப்செட், 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது.

ஹானர் எக்ஸ் 10 பின்புறத்தில் மூன்று கேமராக்கள் மற்றும் முன்பக்கத்தில் பாப்-அப் செல்பி கேமரா உள்ளது. பின்புறத்தில், 40 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாவது சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாவது சென்சார் ஆகியவை உள்ளது. செல்ஃபி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

இணைப்பிற்காக, இந்த போனில் 5 ஜி ஆதரவு, 4 ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை 802.11 அ / பி / ஜி / என் / ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை உள்ளது. போனின் உள்ளே 4,300 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. ஹானர் எக்ஸ் 10 எடை 203 கிராம் ஆகும்.

 
KEY SPECS
Display 6.63-inch
Processor HiSilicon Kirin 820
Front Camera 16-megapixel
Rear Camera 40-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4300mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Honor, Honor X10, Honor X10 price, Honor X10 specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜேபிஎல் லைவ் 780என்சி விமர்சனம்: ஒரு முழுமையான தொகுப்பா?
  2. ஆகஸ்ட் 11 வெளியீட்டிற்கு முன்னதாக ரெட்மி K100 ப்ரோ மேக்ஸின் முக்கிய விவரக்குறிப்புகள், அம்சங்கள் கசிந்துள்ளன
  3. ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல்: நத்திங் ஃபோன் 4a சீரிஸ், ரெனோ 15 சீரிஸ், மேலும் பல தள்ளுபடியில் வழங்கப்படும்
  4. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: சியோமி பேட் 7, ஒன்பிளஸ் பேட் 2, ரெட்மி பேட் 2 மற்றும் பலவற்றில் சிறந்த சலுகைகள்
  5. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 40,000-க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள் அறிவிப்பு
  6. சோனி WH-1000XM6 இப்போது இந்தியாவில் ஆலிவ் கிரே வண்ணத்தில் கிடைக்கிறது: விலை, கிடைக்கும் இடம், அம்சங்கள்
  7. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: நீங்கள் தவறவிடக்கூடாத ஒன்பிளஸ் 15 சலுகை இது
  8. அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் 2026: ரூ. 20,000-க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள்!
  9. ரியல்மி 16x 5G பற்றிய தொகுப்பு: வெளியீட்டுத் தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  10. Poco M8 Power vs OnePlus Nord CE 6 Lite vs Moto G77 Power: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.