19.5:9 டிஸ்பிளேயுடன் ஆனர் ப்ளே: இன்று மாலை 4 மணிக்கு அமேசான் தளத்தில் விற்பனை

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 6 ஆகஸ்ட் 2018 16:04 IST

ஹூவே நிறுவனத்தின் புதிய நடுவரிசை திறன்பேசியான ஆனர் ப்ளே (Honor Play) இன்று மாலை நான்கு மணி முதல் விற்பனைக்கு வருகிறது. இது பிரத்யேகமாக அமேசான் தளத்தில் மட்டுமே கிடைக்கும்.

4ஜிபி ரேம், 6ஜிபி ரேம் என இரு பிரிவுகளில் கிடைக்கும் இப்போன் கடந்த ஜூன் மாதமே சீனாவில் விற்பனைக்கு வந்துவிட்டது. இரண்டிலும் 64ஜிபி இன்டர்னல் மெமரியைக் கொண்டுள்ளது.

19.5:9 டிஸ்ப்ளே கொண்ட திரையும் இரு பின்பக்க கேமராக்களும் இதன் சிறப்பம்சம் ஆகும். மேலும் பேட்டரி பயன்பாட்டை 30% வரை குறைத்து, செயல்திறனை 60% அதிகரிக்கும் GPU Turbo தொழில்நுட்பம் இதன் மற்றுமொரு சிறப்பாகும்.

EMUI 8.2 செயற்கை நுண்ணறிவுத் (AI) திறனின் பல்வேறு அம்சங்களும் இதில் இடம்பெறுகின்றன. முகத்தை வைத்தே அன்லாக் வசதியும் இந்த போனில் உள்ளது.

இந்தியச் சந்தையில் ஆனர் ப்ளே 19,999 ரூபாய்க்கும் (4ஜிபி), 23,999 ரூபாய்க்கும் (6ஜிபி) கிடைக்கும். இன்று மாலை நான்கு மணி முதல் அமேசான் தளம், HiHonorStone ஆகியவற்றில் இது விற்பனைக்கு வருகிறது.
மிட்நைட் ப்ளாக், நேவி ப்ளூ என இரு நிறங்களில் இது வெளியாகிறது. ஓர் ஆண்டு வரை மாதத்துக்குக் கூடுதலாக 10ஜிபி டேட்டா, 999 ரூபாய் மதிப்பு கொண்ட ஓராண்டுக்கான அமேசான் ப்ரைம் சந்தா மற்றும் பல சலுகைகளுடன் இந்த மொபைல் Amazon.in தளத்தில் கிடைக்கும்.
 

ஆனர் ப்ளே 9 திறன் குறிப்பீடுகள் (specifications):

டூயல் சிம் வசதி (நானோ), EMUI 8.2, ஆண்டிராய்ட் 8.1 ஓரியோ. 6.3" திரை, ஃபுல் எச்டி (1080*2340), 19.5:9 அகல உயரத் தகவு. ஹூவே ஹைசிலிக்கான் கிரின் 970 SoC.

Advertisement

இரண்டு பின்புற கேமராக்கள் (16MP முதன்மை கேமரா, 2MP துணை கேமரா), PDAF ஆட்டோ போகஸ், எல்ஈடி ஃப்ளாஷ். முன்புறத்தில் 16 MP கேமரா.

64 ஜிபி இன்பில்ட் மெமரியை 256ஜிபி வரை மெமரி கார்டு (ஹைப்ரிட்) மூலம் நீட்டித்துக்கொள்ளலாம். 4G Volte, வைஃபை 802.11ac (2.4GHz & 5GHz), ப்ளூடூத் v4.2, யூஎஸ்பி - சி (v2.0), GPS/ A-GPS, 3.55மிமீ இயர்போன் ஜாக்.

அக்சலரோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார், டிஜிட்டல் காம்ப்பஸ், சுழல்காட்டி(gyrometer), நெருங்கமை உணரி (proximity sensor) ஆகிய சென்சார்களைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் கைரேகை சென்சாருக்கான வசதி உள்ளது.

Advertisement

176 கிராம் எடை கொண்ட ஆனர் ப்ளே போன், 157.91x74.27x7.48மிமீ அளவில் அமைகிறது. 3750mAh பேட்டரி கொள்ளளவு கொண்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great value for money
  • Elegant design
  • Excellent display
  • Good performance
  • Bad
  • Average cameras
  • Not very easy to hold and use
 
KEY SPECS
Display 6.30-inch
Processor HiSilicon Kirin 970
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3750mAh
OS Android 8.1
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: honor, Huawei, Amazon

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஐபோனுக்கே டஃப் கொடுக்கும் Xiaomi 17 சீரிஸ்! லான்ச் தேதி மற்றும் ஐரோப்பிய விலை விபரங்கள் லீக்
  2. ரியல்மி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்! Realme P4 Lite லான்ச் தேதி வந்தாச்சு! என்ன ஸ்பெஷல்?
  3. பட்ஜெட் விலையில ஒரு தரமான மேட்-இன்-இந்தியா போன்! Lava Bold N2 வந்தாச்சு! அமேசான்ல மட்டும் தான் கிடைக்கும். சீக்கிரம் பாருங்க
  4. Poco X8 Pro-வோட பெர்ஃபாமன்ஸ் ஸ்கோர் லீக் ஆகிடுச்சு! Dimensity 8500 Ultra சிப்செட், 7560mAh பேட்டரின்னு லிஸ்ட் நீண்டுக்கிட்டே போகுது
  5. Apple மார்ச் 4-ல ஒரு பெரிய சம்பவத்துக்கு ரெடி ஆயிட்டாங்க! iPhone 17e மற்றும் கலர்ஃபுல்லான பட்ஜெட் MacBook வருது! நீங்க எதுக்கு வெயிட்டிங்?
  6. இந்தியால 10 கோடி பேர் ChatGPT யூஸ் பண்றாங்களா? வாராந்திர பயனர்களில் இந்தியா 2-வது இடம்! மாணவர்கள் தான் டாப்
  7. Vivo X300 FE லான்ச் ரெடி! 90W சார்ஜிங் கூடவே 6500mAh பேட்டரியா? விவோ-வின் இந்த பட்ஜெட் பிளாக்ஷிப் போன் பத்தி தெரிஞ்சிக்கோங்க
  8. சாம்சங் ஃபோல்டபிள் போன்ல இனிமே அந்த பிரச்சனை இருக்காது! புதிய "Wide" டிசைன் ரெடியாகுது! இதோ லீக் ஆன தகவல்கள்
  9. Apple-ல இருந்து மலிவு விலையில ஒரு MacBook-ஆ? அதுவும் செம்ம கலர்ஸ்ல வருதா? ஆப்பிள் பிரியர்களுக்கு இதோ ஒரு செம்ம குட் நியூஸ்
  10. AI உலகமே டெல்லிக்கு வருது! இந்தியாவின் முதல் AI Impact Summit 2026 - எப்படி Register செய்வது? Full Schedule இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.