நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Honor Magic 7 Pro செல்போன் பற்றி தான். இந்தியாவை பொறுத்தவரை, ஆரம்ப காலத்தில் டச் போன்களை அறிமுகம் செய்து, பெரிய அளவில் விற்பனை செய்து வந்த நிறுவனம் தான்ஹானர். ஆனால் கடந்த சில வருடங்களாவே அதன் விற்பனை டல்லடித்து வரும் நிலையில், இப்பொது தனது புதிய ஃபிளாக்ஷிப் போன் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஹானர். சமீபத்தில் Magic 6 Pro 5G மாடல் அறிமுகமான நிலையில் அடுத்து வெளியாக உள்ள Honor Magic 7 Pro பற்றிய தகவல் கசிந்துள்ளது. மார்பிள் வண்ண பூச்சு கொண்ட பின்பக்க பேனல் இருப்பதை சமீபத்திய போட்டோ காட்டுகிறது. பின்புற கேமரா தொகுதி LED ஃபிளாஷ் யூனிட்டுடன் மூன்று சென்சார்களுடன் காணப்படுகிறது. கேமரா தொகுதியின் மேல் இடது மூலையில் லிடார் சென்சார், எல்இடி ஃபிளாஷ் யூனிட் மற்றும் வெப்பநிலை சென்சார் உள்ளது. மேல் வலதுபுறத்தில் 180 மெகாபிக்சல் அல்லது 200 மெகாபிக்சல் Samsung ISOCELL HP3 சென்சார் இருக்கலாம் என தெரிகிறது. கேமரா தொகுதியின் கீழ் இடது மூலையில் 50 மெகாபிக்சல் OV50K முதன்மை சென்சார் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் கீழ் வலது மூலையில் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் 50 மெகாபிக்சல் சென்சார் இருக்கும். ஹானர் மேஜிக் 7 சீரிஸ் இந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. 180 மெகாபிக்சல் "பெரிஸ்கோப்" சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பாக இருக்கும் என தெரிகிறது. Honor Magic 7 Pro குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 4 சிப்செட்கள் மூலம் இயக்கப்படும். 6,000mAh+ திறன் கொண்ட பேட்டரிகளைப் பெறும் என தேகரிக்கிறது. டிரிபிள் ரியர் கேமரா யூனிட்களுடன் இணைந்து OLED டிஸ்ப்ளே வசதியுடன் வரும் என தெரிய வருகிறது. வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான வசதி இருக்க வாய்ப்பு உள்ளது. தூசி மற்றும் நீர் பாதுகாப்பை பொறுத்தவரை இந்த போனுக்கு IP68 ரேட்டிங் கொடுக்கப்படலாம். கனெக்டிவிட்டி பொறுத்தவரையில், என்று வரும்போது 5G, Wi-Fi, ப்ளூடூத், GPS/AGPS, Galileo, GLONASS, Beidou, OTG மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை இதில் கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 12 ஜிபி RAM + 512 ஜிபி ROM இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Magic UI 8.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 மூலம் இந்த போன் இயங்கும் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என நிறுவனம் கூறுகிறது. தரமான ஆடியோ அனுபவத்தை வழங்க DTS X Ultra sound effects கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இதில் இருக்கும் என கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.