’ஹானர் மேஜிக் 2’ ஸ்மார்ட்போன் குறித்து கசிந்த தகவல்கள்!

விளம்பரம்
Written by Ankit Chawla மேம்படுத்தப்பட்டது: 23 அக்டோபர் 2018 15:30 IST
ஹைலைட்ஸ்
  • ’ஹானர் மேஜிக் 2’ கிரேடியன்ட் நிற வகைகளில் உள்ளது.
  • மொபைல் குறித்து டிக் டோக்கில் வீடியோவில் பதிவிடப்பட்டுள்ளது.
  • சீனாவில் வரும் அக்.31ல் வெளியாக உள்ளது.

’ஹானர் மேஜிக் 2’ குறித்த வீடியோ சமூகவலைதளமான டிக் டோக்கில் வெளிவந்தது.

ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர், ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் தனது புதிய கண்டுபிடிப்பான 'ஹானர் மேஜிக் 2' போனை சீனாவில் வரும் அக்.31ஆம் தேதி வெளியிட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த அந்த நிறுவனத்தின் ஐஎஃப்ஏ 2018 நிகழ்ச்சியில் சிறு முன்னோட்டம் காட்டப்பட்டது. எனினும் இந்த போன் குறித்து அனைத்து தகவல்களும் அப்போது வெளியிடப்படவில்லை. தற்போது இதன் புதிய முன்னோட்ட வீடியோக்கள் சீன சமூகவளைதளமான வேய்போவில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், போனின் அருகிலான தோற்றம், அதன் வடிவமைப்பு, கலர் வகைகள் உள்ளிட்டவை காட்டப்படுகிறது. சீனர்கள் சிலர் இந்த போனை கையில் வைத்தவாறு டிக் டோக்கில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

ஹானர் நிறுவனம் திங்களன்று வேய்போவில் 'ஹானர் மேஜிக் 2' மற்றும் பெட்டிகளுடன் சில தகவல்களுடன் புகைப்படங்களையும் வெளியிட்டது. அதில் முதல் படத்தின் மூலம் 'ஹானர் மேஜிக் 2' ஸ்மார்ட்போன் 3 கேமரா சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் இருப்பது தெரியவந்துள்ளது. அடுத்த படத்தில், முன்பக்க நாட்ச் டிஸ்பிளேயில் கேமரா இருப்பது போல் தெரியவில்லை. மற்றொரு படத்தில், புதிய கிரேடியன்ட் நிறங்களை பின்பக்கம் கொண்டுள்ளது. அதில் ப்ளு மற்றும் ரெட் நிறங்களை கொண்டுள்ளதாக தெரிகிறது.

கேமராவை பொறுத்தவரையில், 'ஹானர் மேஜிக் 2' ஸ்மார்ட்போனில் கைமுறையாக இயக்கும் கேமராவே என நிறுவனம் முன்னதே தெரிவித்தது போலே வேய்போவிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் செயற்கை தொழில்நுட்ப விஷனுடன் வருகிறது.

'ஹானர் மேஜிக் 2' ஸ்மார்ட்போனின் நேரடி தோற்றம் கொண்ட உறுதிசெய்யப்படாத டிக் டோக் வீடியோ ஒன்று யூ-டியூபிலும் வளம்வந்து கொண்டிருக்கிறது. 'ஹானர் மேஜிக் 2' பின்னணி இசையில் டிரம்ஸ் வாசிப்பது போன்று போகும் அதில் கைமுறை கேமரா குறித்தும் காட்டப்படுகிறது.

'ஹானர் மேஜிக் 2' சிறப்பம்சங்கள்,

'ஹானர் மேஜிக் 2' ஸ்மார்ட்போனானது ஸ்போர்ட் பேசல் ப்ரி டிஸ்பிளே, ஹைசிலிகோன் கிரின் 980 கொண்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3,400mAh கொண்ட இந்த போன் ஹூவாய் 40 வாட்ஸ் சூப்பர் சார்ஜிங் டெக்னாலஜி கொண்டுள்ளது. பின்பக்கம் 16 மெகாபிக்ஸல்ஸ் சென்சார், 24 மெகாபிக்ஸல்ஸ் சென்சார் மற்றும் இன்னொரு 16 மெகாபிக்ஸல்ஸ் சென்சார் கொண்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 9.0 பை கொண்டு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டு வெளிவருவதாக தெரிகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Honor Magic 2, Honor Magic 2 Specifications, Honor, Huawei
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போனுக்கு ரூ. 2,450 தள்ளுபடி: 6,000mAh பேட்டரி கொண்ட போன் குறைந்த விலையில் கிடைக்கிறது
  2. ரியல்மி 16டி 5ஜி போனுக்கு ரூ. 3,500 தள்ளுபடி: 8,000mAh பேட்டரி கொண்ட போனை குறைந்த விலையில் வாங்குங்கள்
  3. மேப்பிள் விற்பனை: ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ், 16 ப்ரோ, 15 மாடல்கள் ரூ.40,999 முதல் சலுகைகளுடன் கிடைக்கின்றன
  4. உலகின் முதல் ட்ரை-போல்ட் ஸ்மார்ட்போன் மேம்படுத்தப்படுகிறது: ஹவாய் மேட் எக்ஸ்டி 2 டிசைன் கசிந்தது
  5. ஏர்டெல் ரூ.549 போஸ்ட்பெய்ட் திட்டத்தை நீக்கியது; அடுத்த மேம்படுத்தலாக ரூ.699 திட்டம் மாறுகிறது
  6. குரோம்புக் vs விண்டோஸ் லேப்டாப்: இந்தியாவில் நீங்கள் எதை வாங்க வேண்டும்?
  7. ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை ஹாட்ஸ்பாட் மூலம் பகிர முடியாது எனத் தகவல்: இதுவரை தெரிந்தவை
  8. இந்தியாவில் ஃபிஃபா உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியை நேரலையாக (Live Stream) பார்ப்பது எப்படி
  9. பயன்படுத்திய போன் வாங்கப்போறீங்களா? பணத்தைச் செலவிடும் முன் இந்த விஷயங்களை உடனே சரிபார்க்கவும்!
  10. அலுமினியம் ஃபாயில் வீட்டு வைஃபை-ஐ மேம்படுத்தி, தேவையான இடத்தில் அதிவேக நெட்வொர்க்கை வழிநடத்தும்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.