Photo Credit: Honor
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Honor GT செல்போன் பற்றி தான்.
ஹானர் நிறுவனம் அதன் புதிய சக்தி வாய்ந்த பட்ஜெட் கேமிங் ஸ்மார்ட்போன் சாதனமான Honor GT ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது பல அட்டகாசமான AI அம்சங்களை அடக்கியுள்ளது. புதிய ஹானர் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டில் இயங்குகிறது மற்றும் 16ஜிபி ரேம் மற்றும் அதிகபட்சமாக 1டிபி மெமரியை கொண்டுள்ளது. Honor GT ஆனது 100W வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும். 5,300mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் முன் பக்க கேமரா உடன் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
Honor GT ஆனது 12GB RAM + 256GB மெமரி மாடல் ரூ. 25,000 விலையில் தொடங்குகிறது.
12ஜிபி + 512ஜிபி, 16ஜிபி + 256ஜிபி மற்றும் 16ஜிபி + 512ஜிபி ரேம் மற்றும் மெமரி மாடல்கள் விலை முறையே ரூ. 29,000, ரூ. 32,000, ரூ. 38,000 ஆகும். இது அரோரா கிரீன், ஐஸ் ஒயிட் மற்றும் பாண்டம் பிளாக் வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.
டூயல் நானோ சிம் வசதியை கொண்டுள்ளது ஹானர் ஜிடி. ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான MagicOS 9.0 மூலம் இயங்குகிறது. இது 6.7-இன்ச் முழு-HD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் PWM மதிப்பு 3,840Hz மற்றும் 1,200 நிட்ஸ் பிரகாச நிலை கொண்டது. கேமிங் திரையுடன் ஒயாசிஸ் கண் பாதுகாப்பு அமைப்பு கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 SoC உடன் Adreno 750 GPU மூலம் இயங்குகிறது, 16GB வரை ரேம் மற்றும் 1TB வரை மெமரியை கொண்டுள்ளது. மொபைல் சூடு ஏறுவதை தடுக்க 5,514 மிமீ சதுர பரப்பளவு மற்றும் 9W வெப்ப கடத்துத்திறன் கொண்ட ஜெல் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய அமைப்பை Honor GT கொண்டுள்ளது.
50-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா OIS சப்போர்ட் உடனும், 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் மேக்ரோ ஷூட்டர் மற்றும் ஆட்டோஃபோகஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. இணைப்பு விருப்பங்களில் Bluetooth 5.3, GPS, Beidou, GLONASS, Galileo, NFC, OTG, Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax/be, மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP65-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்