கிறிஸ்மஸ் பண்டிகைக்காக ஹானர் ஆவலாக இருக்கிறது. மேலும், ஹானர் போன்களில் 55 சதவீதம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. Amazon-ன் Fab Phone Fest Year End Sale மற்றும் Flipkart-ன் Year End Sale ஆகியவற்றின் போது இந்த விற்பனை நடைபெறும். இது டிசம்பர் 20-ஆம் தேதி அமேசானிலும், டிசம்பர் 21-ஆம் தேதி பிளிப்கார்ட்டிலும் நேரலைக்கு வ்ரும். Honor 20, Honor 20i, Honor 10, Honor 9N மற்றும் Honor 9i போன்ற போன்கள் குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கும். அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு ஏற்கனவே இந்த ஒப்பந்தங்களுக்கான அணுகல் உள்ளது மற்றும் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் டிசம்பர் 20 இரவு 8 மணி முதல், விற்பனைக்கு விரைவான அணுகலைப் பெறுவார்கள்.
Honor 20-க்கு கிறிஸ்மஸ் விற்பனையின் போது ரூ. 2,000 தள்ளுபடியைப் பெறும். இது வெறும் ரூ. 22.999-க்கு கிடைக்கும். இதேபோல், Honor 20i-யானது அதன் வெளியீட்டு விலையான ரூ. 14.999-க்கு பதிலாக வெறும் ரூ. 10,999-க்கு கிடைக்கும். கூடுதலாக, இந்த போன்களை வாங்கும்போது no-cost EMI, எக்ஸ்சேஞ் தள்ளுபடி மற்றும் வங்கி கேஷ்பேக்குகளை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வழங்குகின்றன.
Honor 10 Lite-ன் 3GB RAM வேரியண்ட் குறைக்கப்பட்ட விலையாக ரூ. 7,999-க்கு பட்டியலிடப்படுள்ளது. மேலும், 4GB RAM வேரியண்ட் ரூ. 10,999-யாகவும், அதே சமயம் 6GB RAM வேரியண்ட் ரூ.9,999-க்கு கிடைக்கும். Honor 10 Lite பிளிப்கார்ட்டில் வாங்குவதற்கு மட்டுமே கிடைக்கும். மேலும், வங்கி கேஷ்பேக்குகள், no-cost EMI ஆப்ஷன்கள் மற்றும் போனில் எக்ஸ்சேஞ் தள்ளுபடி ஆகியவற்றை இ-காமர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
Honor 9N-ன் 3GB + 32GB வேரியண்ட் ரூ. 11,999-ல் இருந்து குறைக்கப்பட்டு ரூ.7,499-க்கு பட்டியலிடப்படுள்ளது. அதேபோல், 4GB+128GB வேரியண்ட் அதன் அசல் விலையான ரூ. 17,999-ல் இருந்து குறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த போன் பிளிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. Honor 9i-ன் 4GB + 64GB மாடல் தள்ளுபடி விலையுடன் ரூ. 7,999-க்கு பட்டியலிடப்படுள்ளது.
Honor Pad 5 போன்ற டேப்லெட்டுகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 3GB + 32GB ஸ்டோரேஜ் கொண்ட 8-inch டேப்லெட்டின் விலை ரூ. 11,999-யாகவும், அதன் 4GB + 64GB ஸ்டோரேஜின் விலை ரூ. 14,999-யாகவும் பட்டியலிடப்படுள்ளது. Honor Pad 5-யின் 10-inch மாடலின் 3GB RAM ஸ்டோரேஜின் விலை ரூ. 13,999 மற்றும் 4GB RAM ஸ்டோரேஜின் விலை ரூ. 18,990-க்கும் கிடைக்கிறது. அதேபோல், Honor MediaPad T3 8-inch 16GB வேரியண்டின் விலை ரூ. 8,999-யாகவும், 32GB வேரியண்டின் விலை ரூ. 9,999-யாகவும் பட்டியலிடப்படுள்ளது. அதன் 9.6-inch 16GB வேரியண்ட் சில்லறை விலையில் ரூ. 9,999-யாகவும், 32GB வேரியண்டின் விலை 11,999-யாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்