4,000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்ட ஹானர் ‘9X, ஹானர் 9X ப்ரோ’ ரிலீஸ் ஆனது- விலை, சிறப்பம்சங்கள்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 24 ஜூலை 2019 13:45 IST
ஹைலைட்ஸ்
  • ஹானர் 9X சற்று விலை குறைவானது
  • 9X மற்றும் 9X ப்ரோவில் 48 மெகா பிக்சல் பின்புற கேமரா இருக்கிறது
  • 9X ப்ரோவில் கூடுதலாக ஒரு பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது

9X ப்ரோவில் 3 பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 48, 2 மெகா பிக்சல் கொண்ட சென்சார்களைத் தவிர்த்து 8 மெகா பிக்சல் கொண்ட வைடு-ஆங்கில் லென்ஸும் 9X ப்ரோவில் இருக்கும். 

ஹானர் 9X மற்றும் ஹானர் 9X ப்ரோ ஸ்மார்ட் போன்கள் சீனாவில் செவ்வாய் கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, ஹைசிலிகான் கிரின் 810 எஸ் ஓ சி, ஜிபியூ டர்போ 3.0, ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 4000 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட அட்டகாச வசதிகளை இந்த போன்கள் பெற்றுள்ளன. இரண்டு போன்களிலும் 16 மெகா பிக்சல் பாப் அப் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. 9X ப்ரோவில் 3 பின்புற கேமரா இருக்கும். 9X-ல் இரண்டு பின்புற கேமரா மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.

ஹானர் 9X மற்றும் ஹானர் 9X ப்ரோ விலை:

ஹானர் 9X-ன் 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகை, 14,000 ரூபாய்க்கு விற்கப்படும். இந்த போனின் 6ஜிபி + 64ஜிபி வகை போன் 16,000 ரூபாய்க்கு விற்கப்படும். அதே நேரத்தில் 6ஜிபி + 124ஜிபி வகை போன் 19,000 ரூபாய்க்கு மார்க்கெட்டில் கிடைக்கும். மிட்நைட் கருப்பு, மிட்நைட் ப்ளூ, சிவப்பு நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். வரும் ஜூலை 30 ஆம் தேதி முதல் இந்த போனை வாங்க முடியும். 

ஹானர் 9X ப்ரோ போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகை, 22,000 ரூபாய்க்கு விற்கப்படும். அதே நேரத்தில் அந்த போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன், 24,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இந்த போன், மிட்நைட் கருப்பு, ஃபேன்டம் ப்ளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் இந்த போனை வாங்க முடியும். 

ஹானர் 9X சிறப்பம்சங்கள்:

இந்த போன் ஆண்ட்ராய்டு பை மென்பொருள் கொண்டு இயங்குகிறது. 6.59 இன்ச் முழு எச்.டி+ திரையுடன், 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வசதியை 9X பெற்றுள்ளது. ஹைசிலிகான் கிரின் 810 ஆக்டா கோர் ப்ராசஸரால் பவரூப்பட்டுள்ளது 9X. 
 

ஹானர் 9X-ன் பின்புறத்தில் 48 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட இரண்டாம் நிலை கேமரா இருக்கிறது. 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவையும் இந்த போன் பெற்றுள்ளது. 

Advertisement

கூடுதலாக 4,000 எம்.ஏ.எச் பேட்டரி, வை-ஃபை 802.11ac, ப்ளூடூத் v5, 3.5 எம் எம் ஆடியோ ஜாக், USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட வசதிகளையும் பெற்றுள்ளது இந்த போன். 

ஹானர் 9X ப்ரோ சிறப்பம்சங்கள்:

ஹானர் 9X-ல் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றனவோ, அதையேதான் 9X ப்ரோ போனும் கொண்டுள்ளது. ஆனால், 9X ப்ரோவில் 3 பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 48, 2 மெகா பிக்சல் கொண்ட சென்சார்களைத் தவிர்த்து 8 மெகா பிக்சல் கொண்ட வைடு-ஆங்கில் லென்ஸும் 9X ப்ரோவில் இருக்கும். 

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Immersive full-screen display
  • Reliable performance
  • All-day battery life
  • Decent night mode
  • Bad
  • Underwhelming cameras
  • Stutters at gaming
  • EMUI is loaded with bloatware
  • Bulky and unwieldy
 
KEY SPECS
Display 6.59-inch
Processor HiSilicon Kirin 710F
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 6 வருஷம் அப்டேட்! Samsung-ன் புது 5G போன் Galaxy F70e வந்தாச்சு.. லெதர் பினிஷ் டிசைன்ல செம மாஸா இருக்கு
  2. Pixel 10 இப்போ பட்ஜெட் விலையில! அமேசான்ல ரூ. 11,000 வரைக்கும் தள்ளுபடி.. இந்த AI கேமரா மான்ஸ்டரை மிஸ் பண்ணிடாதீங்க
  3. S25 Ultra-வோட விலை மளமளன்னு குறைஞ்சிடுச்சு! இப்போ ரூ. 18,599 வரைக்கும் டிஸ்கவுண்ட்.. அமேசான்ல இந்த டீலை மிஸ் பண்ணிடாதீங்க
  4. பட்ஜெட் விலையில் ஒரு பவர்ஃபுல் போன்! Oppo K14 லான்ச் நெருங்கிடுச்சு.. 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங்னு சிறப்பம்சங்கள் மிரட்டுது
  5. மோட்டோரோலாவின் அடுத்த பிளான் இதுதான்! Moto Buds 2 Plus டிசைன் லீக்.. செம ஸ்டைலான புது கேஸ்ல வருது
  6. ₹90,000 போன் இப்போ ₹57,000-க்கு! Vivo X100 Pro மீது அமேசான் அதிரடி விலைக்குறைப்பு.. டீலை மிஸ் பண்ணிடாதீங்க
  7. இதுதான் சரியான நேரம்! Pixel 9 Pro Fold-க்கு அமேசான்ல ரூ. 52,000 தள்ளுபடி.. ஆஃபர் முடியறதுக்குள்ள அள்ளிக்கோங்க
  8. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  9. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  10. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.