Photo Credit: Weibo
ஹூவாயின் துணை நிறுவனமான ஹானர் அதன் முன்னணி தயாரிப்பான ஹானர் 10-ஐ ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டது. இந்தியாவில் மே மாதம் விற்பனைக்கு வந்தது. இப்போது சில மாறுதல்களை செய்து நவம். 21 ஆம் தேதி சீனாவில் வெளியிடப்போவதாக ஹானர் அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட தேதியில் பிஜிங்கில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஹூவாய் முடிவு செய்துள்ளது. அப்போது ஹானர் 10 லைட் வெளிவரும் தேதி குறித்து அறிவிக்கப்படும். அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் டீசர் போஸ்டர் போனின் பின்புறத்திலிருக்கும் முக்கியம்சத்தை காட்டியுள்ளது. அது ஹானர் 10 உடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது.
ஹானர் நிறுவனம், சீன சமூக வலைதளம் ஒன்றில் ஹானர் 10 லைட் நவம். 21 ஆம் தேதி வெளிவர இருக்கும் செய்தியை பதிவிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஒன்றின் கீழ் ஒன்றாக இரு கேமிராக்கள் அமைந்துள்ளது. பின்புற ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் இரட்டை நிறத்திலான பின்புறத்தை கொண்டுள்ளது.
ஹானர் 10 லைட்டின் பின்புறம், ஹானர் நோட் 10, ஹானர் 8எக்ஸ் மற்றும் ஹானர் 8சியின் தூண்டுதலால் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஹானர் 10 லைட் போஸ்டரில் போனின் முன்புற தோற்றம் காட்டப்படவில்லை இதனால் ஹானர் 10 லைட்டில் டிஸ்பிளே நாட்ச் உள்ளதா? இல்லையா? என்று தெரியவில்லை. அடுத்த வாரத்தில் ஹானர் 10 லைட் அறிமுகப்படுத்தப்படும்போது மற்ற தகவல்கள் வெளிவரும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்