ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்டான ஹானர் தனது தயாரிப்பான ஹானர் 10 லைட் போனை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் ஹானர் 10 லைட் போனுக்கு இன்று புதிய சேமிப்பு வசதி கொண்ட தயாரிப்பு அறிமுகமானது.
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதிகொண்ட இந்த புதிய மாடல் ஏற்கனவே வெளியான 4ஜிபி ரேம் 64ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 6ஜிபி ரேம் 64ஜிபி சேமிப்பு வசதி ஸ்மார்ட்போனுடன் வெளியிடப்படும்.
ஹானர் 10 லைட் (3ஜிபி ரேம்) விலை மற்றும் அறிமுக விலை:
இந்த ஹானர் 10 லைட் போனின் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதிகொண்ட ஸ்மார்ட்போன் ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாபையர் புளூ மற்றும் மிட் நைட் பிளாக் ஆகிய நிற வகைகளில் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
கூடுதல் கட்டணமில்லா தவணை திட்டம் மற்றும் எக்ஸ்சேஞ் திட்டம் போன்ற பல அமைப்புகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வகை விற்பனைக்கு வந்துள்ளது.
ஹானர் 10 லைட் அமைப்புகள்:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்டுராய்டு 9 பை மற்றும் EMUI 9 மென்பொருளை கொண்டு இயங்குகிறது. 6.21 இஞ்ச் ஹெச்டி திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 12nm ஹைய் சிலிக்கான் கிரிண் 710 SoC பிராசஸரால் பவரூட்டப்பட்டுள்ளது. கேமரா வசதிகளை பொறுத்தவரை பின்புறத்தில் 13 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட இரண்டு சென்சார்கள் உள்ளது.
மேலும் முன்புறத்தில் செல்பிகளுக்காக 24 மெகா பிக்சல் கேமாரவும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 3,400mAh பேட்டரி பவரையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்