Photo Credit: Flipkart India
நோ காஸ்ட் இ.எம்.ஐ, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் உள்ளிட்டவையும் இந்த சம்மர் சேல் மூலம் கிடைக்கும்.
ஃப்ளிப்கார்ட் நிறுவனம், ‘சம்மர் கார்னிவல்' விற்பனையை இன்று முதல் ஆரம்பிக்கிறது. வரும் 7 ஆம் தேதி வரை இந்த சேல் நடைபெறும். இந்த விற்பனையின் மூலம் ஸ்மார்ட் போன்கள், கேமிங் கன்சோல்ஸ், ஆடியோ சாதனங்கள் மற்றும் பல பொருட்களுக்கு தள்ளுபடி கொடுக்கப்பட உள்ளது. நோ காஸ்ட் இ.எம்.ஐ, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் உள்ளிட்டவையும் இந்த சம்மர் சேல் மூலம் கிடைக்கும்.
ஃப்ளிப்கார்ட்டின் சம்மர் கார்னிவல் சேலில், முக்கிய தள்ளுபடி குறித்த விவரங்கள்.
ஆப்பிள் ஐபோன் XR 64ஜிபி:
இந்த சேலின் மூலம் ஐபோன் XR 59,900 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. எச்.டி.எப்.சி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி போனை வாங்கினால், உடனடி 5,990 ரூபாய் கேஷ்-பேக் பெற முடியும். பழைய போனை கொடுத்து மேலும் 17,450 தள்ளுபடியையும் பெற முடியும்.
நோக்கியா 6.1 ப்ளஸ்:
நோக்கியா 6.1 ப்ளஸ் ஸ்மார்ட் போன், ரூ.12,999-க்கு விற்கப்பட உள்ளது. இதன் எம்.ஆர்.பி ரூ.17,600. எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் இந்த போனுக்கு மேலும் தள்ளுபடியைப் பெற முடியும்.
5.8 இன்ச் முழு எச்.டி+ டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமரா, குவால்கம் ஸ்னாப்டிராகன் 636 எஸ்.ஓ.சி ப்ராசஸர், 4ஜிபி ரேம், 3060 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட வசதிகளை இந்த போன் கொண்டுள்ளது.
நோக்கியா 5.1 ப்ளஸ்:
நோக்கியா 5.1 ப்ளஸ் (3ஜிபி, 32ஜிபி வகை) ரூ.7,999-க்கு விற்கப்படும். இதன் எம்.ஆர்.பி விலை ரூ.13,199 ஆகும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை பயன்படுத்தினால் ரூ.7350 ரூபாய் போனின் விலை குறைய வாய்ப்புள்ளது.
5.8 இன்ச் முழு எச்.டி+ டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமரா, 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா, மீடியா டெக் ஹீலியோ P60 ப்ராசஸர், 3ஜிபி ரேம் உள்ளிட்ட வசதிகளை இந்த போன் கொண்டுள்ளது.
ரியல்மி 2 ப்ரோ:
ரியல்மி 2 ப்ரோவின் 4ஜிபி ரேம், 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன் இந்த சம்மர் சேலின் மூலம் ரூ.10,990க்கு கிடைக்கிறது. இதன் எம்.ஆர்.பி விலை ரூ.14,990 ஆகும். ரியல்மி 2 ப்ரோவின் 6ஜிபி ரேம், 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன் இந்த சம்மர் சேலின் மூலம் ரூ.11,950க்கு கிடைக்கிறது. இதன் எம்.ஆர்.பி விலை ரூ.16,990 ஆகும். இந்த ஸ்மார்ட் போன்களுக்கும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் உண்டு.
6.3 இன்ச் முழு எச்.டி+ டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமரா, குவால்கம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்.ஓ.சி ப்ராசஸர், 4ஜிபி ரேம், 3500 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட வசதிகளை இந்த போன் கொண்டுள்ளது.
ஹானர் 9 லைட்:
ஃப்ளிப்கார்ட் சம்மர் சேலில் ஹானர் 9 லைட் போன், ரூ.9,999-க்கு கிடைக்கிறது. இதன் எம்.ஆர்.பி விலை ரூ.16,999 ஆகும். இந்த போனுக்கு எந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் இல்லை.
5.65 இன்ச் முழு எச்.டி+ டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமரா, க்ரீன் 659 எஸ்.ஓ.சி ப்ராசஸர், 4ஜிபி ரேம், 3000 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட வசதிகளை இந்த போன் கொண்டுள்ளது.
ஹானர் 10:
ஹானர் 10 ஸ்மார்ட் போனின் விலையையும், ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இந்த சம்மர் சேல் மூலம் குறைத்துள்ளது. இந்த போன் ரூ.24,999 என்கின்ற தள்ளுபடி விலையில் கிடைக்கும். இதன் எம்.ஆர்.பி ரூ.35,999 ஆகும். இந்த போனுக்கும் எந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் இல்லை.
5.84 இன்ச் முழு எச்.டி+ டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமரா, க்ரீன் 970 எஸ்.ஓ.சி ப்ராசஸர், 6ஜிபி ரேம் உள்ளிட்ட வசதிகளை இந்த போன் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்