Redmi K20 Pro, Redmi K20, Poco F1, Vivo Z1 Pro, Realme 5, Google Pixel 3a, Samsung Galaxy S9, iPhone 7 Plus மற்றும் பல ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட்டில் சமீபத்திய பண்டிகை போனான்சா விற்பனையின் போது தள்ளுபடியைப் பெற்றுள்ளன. அக்டோபர் 29, செவ்வாய்க்கிழமை வரை நேரலையில் இருக்கும். நான்கு நாள் நீண்ட விற்பனையான இது, பிரபலமான மாடல்களான Samsung Galaxy A50, Realme X, and Oppo Reno 10x Zoom போன்றவற்றில் ப்ரீபெய்ட் தள்ளுபடி சலுகைகளையும் கொண்டு வருகிறது. கூடுதலாக பல்வேறு ஸ்மார்ட்போன்களில் எக்ஸ்சேஞ் தள்ளுபடியை பிளிப்கார்ட் வழங்குகிறது. மேலும், ஸ்மார்ட்போன் பாகங்கள், பின் அட்டைகள் மற்றும் திரை பாதுகாப்பாளர்கள் போன்ற ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள் உள்ளன. புதிய விற்பனை குறிப்பிடத்தக்க வகையில் பிளிப்கார்ட் தனது பிக் தீபாவளி விற்பனையின் கடைசி சுற்றை முடித்த பின்னரே வருகிறது.
பிரத்யேக மைக்ரோசைட் மூலம் பிளிப்கார்ட் அதன் பண்டிகை போனான்ஸா விற்பனையின் கீழ் பல்வேறு ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை சிறப்பித்துள்ளது. Redmi Note 7S, அதன் வழக்கமான தொடக்க விலையான ரூ. 10.999-ல் இருந்து ரூ. 8,999 முதல் விற்பனை செய்கிறது. இதேபோல், Realme 5-யின் ஆரம்ப விலை ரூ. 8,999. இந்த போன் பொதுவாக ரூ. 9,999 முதல் ஆரம்பமாகும்.
இந்தியாவில் Vivo Z1 Pro-வின் விலையும் ரூ. 14,990-ல் இருந்து தள்ளுபடி விலையாக ரூ. 12,990-யாக உள்ளது. இதேபோல், Redmi Note 7 Pro-வின் ஆரம்ப விலை ரூ. 13,999-ல் இருந்து ரூ. 11,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Redmi K20-யின் ஆரம்ப விலை ரூ. 21,999-ல் இருந்து ரூ. 19,999-க்கு பிளிப்கார்ட் விற்பனையில் கிடைக்கிறது. அதேபோல், Redmi K20 Pro-வின் ஆரம்ப விலை ரூ. 24,999-க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சில்லரை விலையில் ரூ. 27,999 முதல் ஆரம்பமாகும்.
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான mid-range ஸ்மார்ட்போன்களில் ஒன்றான Poco F1, அதன் வழக்கமான அடிப்படை விலையான ரூ. 18.999-யிலிருந்து குறைக்கப்பட்டு ஆரம்ப விலையில் ரூ. 14,999-க்கு கிடைக்கிறது. Vivo V15-ன் விலை ரூ. 19,990-ல் இருந்து ரூ. 15,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Google Pixel 3-யின் ஆரம்ப விலை ரூ. 42,999-யாகவும் Google Pixel 3a-வின் விலை ரூ. 29,999 முதல் கிடைக்கும் என்று பிளிப்கார்ட் பட்டியலிட்டுள்ளது. Pixel 3 சில்லரை விற்பனையில் ரூ. 53,000-யாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Pixel 3a-வின் ஆரம்ப விலை ரூ. 39,999-ஆக உள்ளது.
iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகியவை தள்ளுபடியுடன், ஆரம்ப விலையாக ரூ. 26,999 உள்ளது. அதேபோல், Samsung Galaxy S9 ரூ. 29,999-யாக தள்ளுபடி விலையை பெறுகிறது. மேலும், Samsung Galaxy S9+ ரூ. 34,999-க்கு கிடைக்கிறது. Samsung Galaxy A50-யின் ஆரம்ப விலை ரூ. 18,490-யாகவும், பிளிப்கார்ட் விற்பனையில் ரூ. 16,999-க்கும் கிடைக்கிறது.
ஸ்மார்ட்போன் மாடல் | விற்பனையின் ஆரமப் விலை (ரூ.) | வழக்கமான ஆரம்ப விலை (ரூ.) |
---|---|---|
Redmi Note 7S | 8,999 | 10,999 |
Redmi Note 7 Pro | 11,999 | 13,999 |
Realme 5 | 8,999 | 9,999 |
Vivo Z1 Pro | 12,990 | 14,990 |
Redmi K20 | 19,999 | 21,999 |
Redmi K20 Pro | 24,999 | 27,999 |
Poco F1 | 14,999 | 18,999 |
Oppo F11 Pro | 15,990 | 19,990 |
Vivo V15 | 15,990 | 19,990 |
Google Pixel 3a | 29,999 | 39,999 |
Samsung Galaxy A50 | 16,999 | 18,490 |
Black Shark 2 | 29,999 | 39,999 |
ஸ்மார்ட்போன் மாடல்களான Realme X, Realme C2, Realme 3, Motorola One Action மற்றும் Lenovo A6 Note ஆகியவை கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடியுடன் கிடைக்கின்றன. Oppo Reno 10x Zoom மற்றும் Nokia 7.2 போன்ற போன்களுக்கு ரூ.3000 எக்ஸ்சேஞ் தள்ளுபடியை வழங்குகிறது பிளிப்கார்ட்.
எஸ்பிஐ கார்டுகளைப் பயன்படுத்தி பண்டிகை போனான்ஸா விற்பனையின் போது பட்டியலிடப்பட்ட ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்க பிளிப்கார்ட் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் (SBI) கூட்டு சேர்ந்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்